கொல்கத்தாவில் கனமழை: போட்டி ரத்து செய்யப்பட்டால் பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?
கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் பிளே ஆஃப் வாய்ப்பு லக்னோவிற்கு அமையும்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் வாய்ப்புக்கான போராடி வருகின்றன. ஏற்கனவே நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக சென்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
கேகேஆருக்கு கடைசி வாய்ப்பு: லக்னோவை 103 ரன்களில் ஜெயித்தால் பிளே ஆஃப் வாய்ப்பு!
இதைத் தொடர்ந்து சிஎஸ்கே, லக்னோ, ஆர்சிபி, ராஜஸ்தான், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளுக்கு இடையில் பிளே ஆஃப் வாய்ப்பு போட்டி நிலவுகிறது. இதில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 68ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
9ஆவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறிய பஞ்சாப்!
இந்தப் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் கொல்கத்தா தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து 4ஆவது அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும்.
பஞ்சாப்பை துரத்தியடித்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால் நெட் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பு அமையும். ஆனால், கொல்கத்தாவில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்றும் மழை நீடித்து போட்டி ரத்து செய்யப்பட்டால் அது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்க்கு சாதகமாக அமையும்.
மேலும், சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் கடைசி போட்டிகளில் தோல்வி அடைந்தால் லக்னோ புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு 2ஆவது அணியாக தகுதி பெறும்.
WTC Final - 3 பேட்ஜாக லண்டன் புறப்படும் டீம் இந்தியா!