Rohit Sharma Wins T20 World Cup – இந்திய அணி டிராபி வென்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவு!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டிராபி வென்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்த உள்ள நிலையில் Rohit Sharma Wins T20 World Cup என்ற ஹேஷ்டேக் எக்ஸ் பக்கத்தில் டிரெண்டாகி வருகிறது.

It has been a month since India won the T20 World Cup 20244 Under the Rohit Sharma Captaincy , without losing a single match rsk

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர்களில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. இதில், குரூப் ஸ்டேஜ் மற்றும் சூப்பர் சுற்று போட்டிகளில் விளையாடிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு வந்தது. இதில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது. கடந்த ஜூன் 29 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

Paris 2024: இந்தியா விளையாடும் போட்டிகள் - Day 3: இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுப்பாரா ரமீதா ஜிண்டால்?

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலி மற்றும் அக்‌ஷர் படேலின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. விராட் கோலி 76 ரன்கள் குவித்தார். அக்‌ஷர் படேல் 47 ரன்கள் குவித்தார். ஷிவம் துபே 27 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பின்னர், 177 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர்கள் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 4 ரன்னிலும், குயீண்டன் டி காக் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Paris 2024:இந்தியாவிற்கு முதல் பதக்கம் வெண்கலம் வென்று கொடுத்த மனு பாக்கரை தொலைபேசியில் அழைத்து மோடி வாழ்த்து!

கேப்டன் எய்டன் மார்க்ரம் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். எனினும், ஸ்டப்ஸ் 31 ரன்களில் வெளியேறினார். ஆனால், கிளாசென் விளையாடியதைப் பார்க்கையில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுவிடும் என்ற் நினைக்கத் தோன்றியது.

Paris Olympics 2024: இன்னும் நிறைய பதக்கங்களை வெல்வோம்: வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் நம்பிக்கை!

அந்தளவிற்கு அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா அவரது விக்கெட்டை கைப்பற்றி போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். தென் ஆப்பிரிக்காவின் கடைசி நம்பிக்கையாக களத்தில் டேவிட் மில்லர் இருந்தார். 19 ஓவர்கள் வரையில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்திருந்தது. கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்தியாவின் கடைசி நம்பிக்கையாக ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட மில்லர், சிக்ஸருக்கு தூக்கி அடிக்க பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் ஓடிச் சென்று கச்சிதமாக கேட்ச் பிடித்தார்.

Womens Asia Cup 2024: இந்தியா அதிர்ச்சி தோல்வி – ஆசிய கோப்பை 2024 தொடரில் முதல் முறையாக டிராபி வென்ற இலங்கை!

ஆனால், முதலில் அவுட் என்று கூறிய அவர் எனக்கு அவுட்டா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். டிவி ரீப்ளேயில் அவுட் என்று தெரியவர இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. அதன்பிறகு ரபாடா வந்தார். அவர் வந்த உடனேயே பவுண்டரி விளாசினார். 3ஆவது பந்தில் பைஸ் மூலமாக ஒரு ரன் கிடைத்தது. 4ஆவது பந்தில் லெக் பைஸ் மூலம் ஒரு ரன் எடுக்கப்பட்டது.

ஐந்தாவது பந்தை பாண்டியா வைடாக வீசினார். மீண்டும் வீசப்பட்ட 5ஆவது பந்தில் மஹாராஜ் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஒரு ரன் எடுக்கவே தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தது.

 

 

இதற்கு முன்னதாக தோனி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது. தோனிக்கு பிறகு டி20 உலகக் கோப்பை டிராபியை வென்ற 2ஆவது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இந்த நிலையில் தான் ரோகித் சர்மா டிராபியை வென்று இன்றுடன் ஒரு மாதம் ஆன நிலையில் எக்ஸ் பக்கத்தில் Rohit Sharma Wins T20 World Cup என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இது குறித்து பிசிசிஐ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய டி20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் தனது கேட்ச் குறித்து விளக்கமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios