மகளிருக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டிராபியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 தொடரானது கடந்த 19 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள், தாய்லாந்து, மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள் என்று மொத்தமாக 8 அணிகள் 2 குரூப்களாக பிரிந்து விளையாடின. இதில், முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதன்படி இந்தியா மகளிர் அணி, இலங்கை மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணி, வங்கதேசம் மகளிர் அணி என்று 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.

Paris 2024 Olympics, Manu Bhaker: இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மனு பாக்கர் பற்றி தெரியுமா?

கடைசியாக இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறின. மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா 7 முறை டிராபியை கைப்பற்றியிருக்கிறது. 6ஆவது முறையாக இலங்கை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தான் இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 60 ரன்கள் எடுத்தார்.

துப்பாக்கி சுடுதல் மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் ரமீதா ஜிண்டால் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

ரிச்சா கோஷ் 30 ரன்கள் எடுத்தார். பின்னர் 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இலங்கை மகளிர் அணி பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே 1 ரன்னில் ரன் அவுட் செய்யப்பட்டார். பின்னர் கேப்டன் சமாரி அத்தப்பத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரமா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இருவரும் 2ஆவது விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துக் கொடுத்தனர்.

அத்தபத்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவே, கடைசியில் வந்த கவிஷா தில்ஹாரி 30 ரன்கள் எடுக்கவே இறுதியாக இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. டிராபி வென்ற இலங்கை அணி மற்றும் மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு முதல் பதக்கம் - 12 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்று கொடுத்த மனு பாக்கர்!

இதே போன்று 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10,30,000 பரிசு தொகை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர இறுதிப் போட்டியி ஆட்டநாயகன் விருது பெறுபவருக்கு ரூ.82,000 மற்றும் தொடர் நாயகன் விருது பெறுபவருக்கு ரூ.1,64,000 பரிசுத் தொகை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரையில் நடைபெற்ற 8 தொடர்களில் ஒரு முறை மட்டுமே வங்கதேச மகளிர் அணி டிராபியை கைப்பற்றியிருக்கிறது. மற்ற 7 முறையும் இந்திய மகளிர் அணி டிராபி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Paris 2024: பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!