Asianet News TamilAsianet News Tamil

Paris 2024: இந்தியா விளையாடும் போட்டிகள் - Day 3: இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுப்பாரா ரமீதா ஜிண்டால்?

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 2ஆவது நாளான இன்று இந்திய வீராங்கனை மனு பாக்கர் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த நிலையில் நாளை ஜூலை 29, 3ஆவது நாளில் இந்தியாவிற்கு மகளிர் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் ரமீதா ஜிண்டால் பதக்கம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Paris Olympics 2024 India Schedule Day 3, july 29 Badminton, Shooting, Hocky Matches check details rsk
Author
First Published Jul 28, 2024, 10:18 PM IST | Last Updated Jul 28, 2024, 10:18 PM IST

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரானது பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், ஜூடோ, ரோவிங், படகு போட்டி, பேட்மிண்டன், குதிரையேற்றம், நீச்சல், தடகளப் போட்டி, குத்துச்சண்டை, கோல்ஃப், பளுதூக்குதல், மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது.

Paris 2024:இந்தியாவிற்கு முதல் பதக்கம் வெண்கலம் வென்று கொடுத்த மனு பாக்கரை தொலைபேசியில் அழைத்து மோடி வாழ்த்து!

இதில் முதல் நாளில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவு, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆகிய போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது. மகளிருக்கான ஒற்றையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஹாக்கியில் இந்தியா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதையடுத்து இன்று நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3ஆவது இடம் பிடித்து இந்தியாவிற்கு முதல் பதக்கமான வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த பெண்மணி என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.

Paris Olympics 2024: இன்னும் நிறைய பதக்கங்களை வெல்வோம்: வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் நம்பிக்கை!

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் 10மீ ஏர் ரைபிள் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். வில்வித்தை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது.

இந்த நிலையில் தான் நாளை ஜூலை 29 ஆம் தேதி 3ஆவது நாள் பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்தியா பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, வில்வித்தை ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறது.

Womens Asia Cup 2024: இந்தியா அதிர்ச்சி தோல்வி – ஆசிய கோப்பை 2024 தொடரில் முதல் முறையாக டிராபி வென்ற இலங்கை!

பேட்மிண்டன் – ஆண்கள் இரட்டையர் பிரிவு:

சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி

பிற்பகல் 12 மணி

பேட்மிண்டன் – மகளிர் இரட்டையர் பிரிவு:

அஸ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா க்ராஸ்டோ

பிற்பகல் 12.50 மணி

துப்பாக்கி சுடுதல்: 10 மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் தகுதிச்சுற்று

இந்தியா – 1, மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங்

இந்தியா – 2, ரிதம் சங்வான் மற்றும் அர்ஜூன் சிங் சீமா

பிற்பகல் 12.45 மணி

துப்பாக்கி சுடுதல் டிராப் – ஆண்கள் தகுதிச்சுற்று

பிரித்விராஜ் தொண்டைமான்

பிற்பகல் 1 மணி

துப்பாக்கி சுடுதல்: மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டி

ரமீதா ஜிண்டால்

பிற்கல 1 மணி

துப்பாக்கி சுடுதல்: ஆண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டி

அர்ஜூன் பாபுதா

பிற்பகல் 3.30 மணி

ஹாக்கி: ஆண்கள், இந்தியா vs அர்ஜெண்டினா

மாலை 4.15 மணி

பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு

லக்‌ஷயா சென்

மாலை 5.30 மணி

வில்வித்தை – ஆண்கள் அணி காலிறுதி

தீரஜ் பொம்மதேவரா, பிரவீன் ஜாதவ் மற்றும் தருணீப் ராய்

மாலை 6.30 மணி

டேபிள் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவு

ஸ்ரீஜா அங்குவா- இரவு 11.30 மணி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios