நெஹ்ரா தான் குஜராத் டைட்டன்ஸ் தோல்விக்கு காரணமா? – டுவிட்டரில் தாறுமாறாக வந்த விமர்சனம்!
கடைசி ஓவரை சரியாக யார்க்கராக வீசிக் கொண்டிருந்த மோகித் சர்மாவுக்கு கூல்டிரிங்க்ஸ் கொடுக்க சொல்லி, அறிவுரைகளை வழங்கியே நெஹ்ரா குஜராத் டைட்டன்ஸ் அணியை தோல்வி அடையச் செய்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி 3 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. கடந்த 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் இறுதிப் போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக நேற்று நடந்தது. நேற்று தொடங்கப்பட்ட ஐபிஎல் இறுதிப் போட்டி மழை காரணமாக இன்று முடிந்தது.
5 ஆவது முறையாக சென்னை சாம்பியன்: டிராபியை பெற்றுக் கொள்ள ராயுடு, ஜடேஜாவை அழைத்த தோனி!
டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீசியது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் ஆடியது. இதில், விருத்திமான் சகா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
எனக்கு ஈஸியானது நன்றி சொல்றது, கஷ்டமானது அடுத்த சீசனுக்காக 9 மாசம் கடினமாக உழைக்கனும் – தோனி!
பின்னர் கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நீ ஒன்னும் கஷ்டப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் என்று மழை பெய்தது. இதன் காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் தேவைப்பட்டது. இதில், டெவான் கான்வே 47 ரன்களும், ருத்துராஜ் கெய்க்வாட் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அஜிங்கியா ரஹானே 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ராயுடுவும் 19 ரன்களில் வெளியேற, தோனி களமிறங்கினார். அவர் வந்த வேகத்தில் கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஜடேஜா களமிறங்கினார். கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த் ஓவரை மோகித் சர்மா வீசினார். தொடர்ந்து 4 பந்துகள் யார்க்கராக வீசினார். 5ஆவது பந்தில் அவருக்கு கூல்டிரிங்ஸ் மற்றும் அறிவுரை கூறுகிறேன் என்ற பெயரில் ஏதோ அட்வைஸ் கொடுத்திருக்கிறார் பவுலிங் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா. அந்தப் பந்தில் ஜடேஜா சிக்ஸர் விளாசிவிட்டார்.
ஐபிஎல் 2023 பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? மும்பைக்கு ரூ.7 கோடி, லக்னோவிற்கு ரூ.6.5 கோடி!
இறுதியாக கடைசி பந்தை லெக் சைடில் கொஞ்சம் வைடாக வீசிவிட்டார். இதனை எளிதாக தட்டி விடவே பந்து பவுண்டரிக்கு சென்றது. இதன் காரணமாக சிஎஸ்கே வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், அறிவுரை வழங்குகிறேன் என்ற பெயரில் நன்றாக பந்து வீசிய மோகித் சர்மாவை குழப்பத்தில் ஆழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி தோற்பதற்கு ஆசிஷ் நெஹ்ராவே காரணமாக அமைந்துவிட்டார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த சின்ன இளவரசன் சுப்மன் கில்!
இறுதியாக கடைசி பந்தில் பவுண்டரி அடித்துக் கொடுத்து ஜடேஜா, சென்னை அணியை ஜெயிக்க வைத்துள்ளார். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.
இதையடுத்து சாம்பியன் டிராபி பெற்றுக் கொள்ள தோனி அழைக்கப்பட்டார். ஆனால், அவர் அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜாவை அழைத்து ஐபிஎல் சாம்பியன் டிராபியை பெற்றுக் கொள்ளும்படி கூறினார். இதன் காரணமாக அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து ஐபிஎல் டிராபியை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? மும்பைக்கு ரூ.7 கோடி, லக்னோவிற்கு ரூ.6.5 கோடி!