5 ஆவது முறையாக சென்னை சாம்பியன்: டிராபியை பெற்றுக் கொள்ள ராயுடு, ஜடேஜாவை அழைத்த தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது.

MS Dhoni called Ambati Rayudu and Ravindra Jadeja to Receive IPL Trophy 2023

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி 3 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. கடந்த 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் இறுதிப் போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக நேற்று நடந்தது. நேற்று தொடங்கப்பட்ட ஐபிஎல் இறுதிப் போட்டி மழை காரணமாக இன்று முடிந்தது.

வெற்றிக்குப் பிறகு மனைவியை கட்டியணைத்த ஜடேஜா!

டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீசியது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் ஆடியது. இதில், விருத்திமான் சகா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

சிஎஸ்கேவுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்த ஜடேஜாவை அலேக்காக தூக்கிய தோனி!

பின்னர் கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நீ ஒன்னும் கஷ்டப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் என்று மழை பெய்தது. இதன் காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் தேவைப்பட்டது. இதில், டெவான் கான்வே 47 ரன்களும், ருத்துராஜ் கெய்க்வாட் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அஜிங்கியா ரஹானே 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!

அடுத்து வந்த ராயுடுவும் 19 ரன்களில் வெளியேற, தோனி களமிறங்கினார். அவர் வந்த வேகத்தில் கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஜடேஜா களமிறங்கினார். அப்போது அவருக்கு தெரியாது நாம் தான் வெற்றி தேடி தரப்போகிறோம் என்று.

இறுதியாக கடைசி பந்தில் பவுண்டரி அடித்துக் கொடுத்து ஜடேஜா, சென்னை அணியை ஜெயிக்க வைத்துள்ளார். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.

குஜராத்தை உச்சத்திற்கு கூட்டிச் சென்ற சென்னைக்காரர்: யார் இந்த சாய் சுதர்சன்?

இதையடுத்து சாம்பியன் டிராபி பெற்றுக் கொள்ள தோனி அழைக்கப்பட்டார். ஆனால், அவர் அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜாவை அழைத்து ஐபிஎல் சாம்பியன் டிராபியை பெற்றுக் கொள்ளும்படி கூறினார். இதன் காரணமாக அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து ஐபிஎல் டிராபியை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios