கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி தற்போது நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
வரலாற்றில் முதல் முறையாக 3 நாட்கள் நடந்த ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி!
பின்னர் 215 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சிஎஸ்கே அணி களமிறங்கியது. ஆனால், போட்டியின் முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி தடைபட்டது. அப்போது மைதானத்தில் அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த தோனியின் மகள் ஜிவா, மழை விட வேண்டும். சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என்று இறைவனிடம் கோரிக்கை வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத்தை உச்சத்திற்கு கூட்டிச் சென்ற சென்னைக்காரர்: யார் இந்த சாய் சுதர்சன்?
அதன் பிறகு மழை விட்டதும், போட்டி டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில், தொடக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர்.
டெவான் கான்வே 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ருத்துரஜ் கெய்க்வாட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 27 ரன்களிலும், ராயுடு 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணியை ஜெயிக்க வைத்துள்ளார். இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.