வரலாற்றில் முதல் முறையாக 3 நாட்கள் நடந்த ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி!
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டி 3 நாட்களாக நடந்து வருகிறது.
பதினாறாவது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி எப்போது தான் முடியும் என்று கேட்கும் அளவிற்கு 3 நாட்களாக நடந்து வருகிறது. கடந்த 28ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இந்தன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால், அன்று இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்கியதால் டாஸ் கூட போட முடியவில்லை.
குஜராத்தை உச்சத்திற்கு கூட்டிச் சென்ற சென்னைக்காரர்: யார் இந்த சாய் சுதர்சன்?
இதன் காரணமாக போட்டி மறுநாள் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் டாஸ் வென்றது. ஆனால், பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சகா அதிரடியாக ஆடி 54 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இந்த சீசனில் 3 சதங்கள் அடித்த சுப்மன் கில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் நிறைவு விழாவில் அசத்திய பாடகர் டிவைன்: ரசிகர்களை பிரமிக்க வைத்த டெக்னாலஜி!
பின்னர் வந்த சென்னைக்காரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார். தோனியே வியந்து பார்க்கும் அளவிற்கு அவரது பேட்டிங் இருந்தது. துஷார் தேஷ்பாண்டே ஓவரில் மட்டும் 6, 4, 4, 4, என்று ரன்கள் சேர்த்தார். இறுதியாக அவர் 47 பந்துகளில் 6 சிக்ஸ்கர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 96 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் 2 சிக்ஸர்கள் அடித்து கொடுக்க குஜராத் டைட்டன்ஸ் 214 ரன்கள் குவித்தது.
அதன் பின்னர் கடின இலக்கை துரத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட வந்தது. ஆனால், 3 பந்துகளிலேயே மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்றும் போட்டி ரத்து செய்யப்பட்டுவிடுமோ என்று ரசிகர்களின் எண்ணம் இருந்தது. ஆனால், ஒருவழியாக மழை விடவே, 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
கடந்த 28 ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று நடந்து தற்போது 3ஆவது நாளாக இன்றும் நடக்கிறது. இதில், 15 ஓவர்களில் 171 ரன்கள் தேவை என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.