சிஎஸ்கேவுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்த ஜடேஜாவை அலேக்காக தூக்கிய தோனி!

சிஎஸ்கே 5ஆவது முறையாக சாம்பியனான சந்தோஷத்தில், வெற்றிக்கு வித்திட்ட ஜடேஜாவை தோனி அலேக்காக தூக்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MS Dhoni lifting Ravindra Jadeja after the CSK won against GT in Narendra Modi Stadium, Ahmedabad

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி தற்போது நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!

பின்னர் 215 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சிஎஸ்கே அணி களமிறங்கியது. ஆனால், போட்டியின் முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி தடைபட்டது. அதன் பிறகு மழை விட்டதும், போட்டி டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில், தொடக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர்.

வரலாற்றில் முதல் முறையாக 3 நாட்கள் நடந்த ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி!

டெவான் கான்வே 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ருத்துரஜ் கெய்க்வாட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 27 ரன்களிலும், ராயுடு 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். கடைசி 4 பந்துகளை யார்க்கராக வீசிய அவர் 5ஆவது பந்தில் யார்க்கராக வீச முயற்சித்து தோல்வி அடைந்தார். அந்தப் பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்தார். கடைசியாக ஒரு பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதை லெக்சைடாக வீச, ஜடேஜா லட்டு மாதிரி திருப்பிவிடவே, சிஎஸ்கே அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

குஜராத்தை உச்சத்திற்கு கூட்டிச் சென்ற சென்னைக்காரர்: யார் இந்த சாய் சுதர்சன்?

இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது. சென்னைக்கு வெற்றி தேடி கொடுத்த ரவீந்திர ஜடேஜாவை, தோனி சந்தோஷத்தில் அலேக்காக தூக்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios