IPL 2023 Final CSK VS GT: யார் யாருக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டது? எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?

ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Who won Orange Cap, Purple Cap, Fair play and other awards check details here

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை வீரர் சாய் சுதர்சனின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் 2023 பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? மும்பைக்கு ரூ.7 கோடி, லக்னோவிற்கு ரூ.6.5 கோடி!

பின்னர் சிஎஸ்கே பேட்டிங் ஆடிய போது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதையடுத்து டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனானது.

ஐபிஎல் 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் – ரூ.20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. கேப்டன் எம்.எஸ்.தோனி அதற்கான விருதை பெற்றுக் கொண்டார்.

ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த சின்ன இளவரசன் சுப்மன் கில்!

 

ஐபிஎல் 2023 – 2ஆவது இடம்:

இந்த சீசனில் 2ஆவது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.13 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதற்கான விருதை பெற்றுக் கொண்டார்.

டெவான் கான்வே:

ஐபிஎல் இறுதிப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடிய டெவான் கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நின்ன சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – First அண்ட் Final ஐபிஎல்!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ராஜஸ்தான் ராயல்ஸ் – வளர்ந்து வரும் வீரர்

ராஜஸ்தா ராயல்ஸ் அணியின் தொடக்க இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்பட்டது. அவருக்குப் பதிலாக ஷிவம் துபே அந்த விருதை பெற்றுக் கொண்டார். இந்த விருதுக்கு அவருக்கு ரூ.20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

சுப்மன் கில் – குஜராத் டைட்டன்ஸ்: மிகவும் மதிப்புமிக்க வீரர்:

ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் என்று ஒவ்வொரு டீமா காலி செய்த சுப்மன் கில்: நெக்ஸ்ட் சிஎஸ்கேயா?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சுப்மன் கில்லிற்கு மிகவும் மதிப்புமிக்க வீரருக்கான விருது வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் கேம் சேஞ்சருக்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த 2 விருதுகளுக்கும் ரூ.12 லட்சம் மற்றும் ரூ.12 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி 17 போட்டிகளில் விளையாடியுள்ள கில் 690 ரன்கள் வரையில் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு கேப் வைத்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது.

அடி மேல் அடி வாங்கி பரிதாபமாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்!

ரஷீத் கான் – குஜராத் டைட்டன்ஸ் – கேட்ச் ஆஃப் தி சீசன்

சிறந்த பந்து வீச்சாளரான ரஷீத் கானிற்கு கேட்ச் ஆஃப் தி சீசனுக்கான விருது வழங்கப்பட்டது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஃபேர்பிளே விருது வழங்கப்பட்டது.

முகமது ஷமி – குஜராத் டைட்டன்ஸ் – பர்பிள் கேப்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 17 போட்டிகளில் 28 விக்கெட்டுகள் கைப்பற்றி பர்பிள் கேப் வென்றுள்ளார். பர்பிள் கேப் வென்ற முகமது ஷமிக்கு ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா அணியின் சார்பாக ரன்னர் அப் விருதை பெற்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளமிங் அணியின் சார்பக வெற்றி பெற்றதற்கான விருது பெற்றார்.

வான்கடே மற்றும் ஈடான் கார்டன்ஸ் – பிட்ச் மற்றும் மைதானம் விருது

மும்பை வான்கடே ஸ்டேடியம் மற்றும் கொல்கத்தா ஈடான் கார்டன்ஸ்க்கு பிட்ச் மற்றும் மைதானத்திற்கான விருது வழங்கப்பட்டது. இதில், அவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios