ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான ஏலம் கடந்த 23 ஆம் தேதி கொச்சியில் நடந்தது. இதில் ஒவ்வொரு அணியும் அதிக தொகைக்கும், குறைவான தொகைக்கும் வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி கிளென் மேக்ஸ்வெல்லை ஒரு மில்லியன் டாலருக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், அந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறவில்லை. முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. அந்தப் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ஆவது இடம் (ரன்னர் அப்) பிடித்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆண்ட்ரூ பிளிண்டாப்பை 1.55 மில்லியன் டாலர் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
சைண்டிஸ்ட் அஷ்வின், நீங்க பண்ணது தரமான சம்பவம்.. வேற லெவல் இன்னிங்ஸ்..! சேவாக் புகழாரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கெவின் பீட்டர்சனை 1.55 மில்லியன் டாலர் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2ஆவது இடம் பிடித்தது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஷேன் பாண்டு மற்றும் கிரான் போலார்டு அதிக எக்ஸ்பென்ஷிவ் வீரர்கள். அந்த சீசனில் பாண்ட்டின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளி பட்டியலில் 6ஆவது இடம் பிடித்தது. போலார்டின் மும்பை இந்தியன்ஸ் அணி 2ஆவது (ரன்னர் அப்)இடம் பிடித்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கௌதம் காம்பிரை 2.4 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் எடுத்தது. 2012 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜாவை 2 மில்லியன் டாலர் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால், அந்த சீசனின் சென்னை அணி 2ஆவது இடம் பிடித்தது. 2013 ஆம் ஆண்டு ஏலத்தில் எந்த அணி வீரர்களை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்ததோ அந்த அணி தான் ஐபிஎல் சீசனில் வெற்றி வாகை சூடியது.
இந்தியா 89க்கு ஆல் அவுட் ஆகியிருக்கும்: டுவிட்டர் பதிவுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
கடந்த 2014 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் யுவராஜ் சிங்கை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், அந்த சீசன்களில் இரண்டு அணியும் 7ஆவது இடம் பிடித்தன. கடந்த 2016 ஆம் ஆண்டு ஷேன் வாட்சனை பெங்களூரு அணி அதிக தொகை கொடுத்து ஏலம் எடுத்தது. அந்த சீசனின் பெங்களூரு அணி 2ஆவது இடம் தான் பிடித்தது.
IPL 2023: டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்
கடந்த 2017 ஆம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் அதிக எக்ஸ்பென்ஷிவ் பிளேயர். ஆனால், அவரது ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 2ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
