தோனியைப் போன்று எல்லா மதிப்பும், மரியாதையும் ரோகித் சர்மாவுக்கு உண்டு – சுரேஷ் ரெய்னா!
ரோகித் சர்மா தான் இந்தியாவின் அடுத்த தோனி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, நெதர்லாந்து என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. தற்போது வரையில் 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், இந்தியா விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.
நியூசிலாந்து 2 ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 4ஆவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து 5ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷி சிறப்பாக உள்ளதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணி வீரர்கள் தோனிக்கு எப்படி மதிப்பும், மரியாதையும் கொடுத்தார்களோ அதே போன்று ரோகித் சர்மாவுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கின்றனர்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. மேலும், சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. டீமில் உள்ள சக வீரர்களுடன் பேசும் போதெல்லாம் தோனியைப் போன்று ரோகித் சர்மாவுக்கு மரியாதை இருக்கிறது என்று வீரர்கள் சொல்வார்கள். டிரெஸிங் ரூமில் ரோகித் சர்மா நட்பாக இருந்துள்ளார்.
வீரர்களுக்கும் தன்னம்பிக்கை அளித்து அணியை முன்நின்று வழி நடத்தக்கூடிய ஒரு நல்ல தலைவர். இதெல்லாம் அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஒரு கேப்டனாக அவர் ஓய்வறையில் வீரர்களை சரியாக வைத்துக் கொள்வதும், அவர்களிடமிருந்து மரியாதை பெறுவதுமே அவர் அடுத்த தோனி என்பதை நினைக்க வைக்கிறது என்று கூறியுள்ளார். இறுதியாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த முறை டிராபியை கைப்பற்றும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
South Africa vs Netherlands: ஈரமான அவுட்பீல்டு, மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்!