Asianet News TamilAsianet News Tamil

SA vs NED: மழை, ஈரமான அவுட்பீல்டு காரணமாக ஒரு மணி நேரம் தாமதம் - டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு!

உலகக் கோப்பையில் 15ஆவது லீக் லீக்கில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

South Africa won the toss and choose to field first against Netherlands in 15th Match of CWC at Dharamsala rsk
Author
First Published Oct 17, 2023, 2:54 PM IST | Last Updated Oct 17, 2023, 2:54 PM IST

இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதுவரையில் நடந்த போட்டிகளின் படி இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலும், நியூசிலாந்து 2ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 4ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தியா CWC கைப்பற்ற 5000 எலுமிச்சம் பழம் கொண்டு துர்கா தேவியின் மணல் சிற்பம் வரைந்து சுதர்சன் பட்நாயக்!

நெதர்லாந்து விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது தரமசாலா மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கு டாஸ் போட இருந்த நிலையில், ஈரமான அவுட்பீல்டு மற்றும் மழையின் காரணமாக தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது.

 

நெதர்லாந்து:

ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், விக்ரம்ஜித் சிங், தேஜா நிடமானுரு, ரோலோஃப் வான் டெர் மெர்வே, பால் வான் மீகரென், லோகன் வான் பீக், ஆர்யன் தத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.

தென் ஆப்பிரிக்கா:

டெம்பா பவுமா (கேப்டன்), கெரால்டு கோட்ஸி, குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, கஜிஸோ ரபாடா, ரஸிவ் வான் டெர் டுசென்.

IND vs PAK: இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது பெண் போலீஸை தாக்க முயன்ற ரசிகருக்கு கன்னத்தில் பளார் பளார்!

இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 7 போட்டிகளில் 6ல் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இதே போன்று உலகக் கோப்பை கிரிகெட்டில் விளையாடிய 3 போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி தான் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

South Africa vs Netherlands: ஈரமான அவுட்பீல்டு, மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்!

இந்த நிலையில், உலகக் கோப்பை 15ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தப்ரைஸ் ஷம்சி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கெரால்டு கோட்ஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று நெதர்லாந்து அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரியான் க்ளீனிற்கு பதிலாக லோகன் வான் பீக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios