பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிக்கு முன்னதாக ஆசம் கான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

துபாய்: பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் வீரர் ஆசம் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். எந்த அணி நன்றாக விளையாடுகிறதோ அந்த அணிதான் வெற்றி பெரும் என்று தெரிவித்துள்ளார். 


நாளைய போட்டியில், பாகிஸ்தான் அணி தன்னுடைய பட்டத்தை தக்க வைக்க இந்தியாவுடன் மோத இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரா 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற பாகிஸ்தான் தற்போது இந்தியாவுடன் நாளை மோதுவதற்கு தயாராகி வருகிறது. பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக சரியாக விளையாடாமல் போனால், அவங்க நிறைய கணக்கு போட்டு பார்த்தாதான் ஜெயிக்க முடியும். பாகிஸ்தான் ஜெயித்தால் இந்த டோர்னமெண்டில் இன்னும் சூப்பரா இருக்கும் என்று ஆசாம் கான் தெரிவித்துள்ளார். 


இந்தியா - பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் போட்டி குறித்து ஆசாம் கான் கூறுகையில், ''பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு என்னோட வாழ்த்துக்கள். இது வெறும் விளையாட்டுதான். போட்டி ரொம்ப சூடா இருக்கும், எந்த அணி தப்பு செய்யாமல் விளையாடுகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும் என்று ஏஎன்ஐக்கு கொடுத்த பேட்டியில் ஆசாம் கான் தெரிவித்துள்ளார். 

அவர் தனது பேட்டியில், ''இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி வெளியில் தான் மிகைப்படுத்தப்படுகிறது. ஆனா, கொஞ்ச நாளா இரண்டு டீமும் மிகவும் நட்பாக விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். 50 ஓவர் மற்றும் டி20 உலகக் கோப்பைகளை விட, சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக 3-2 என்ற நிலையில் முன்னிலையில் இருக்கிறது. 2017-ல் விராட் கோலி இருந்தபோது 180 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிச்சதுதான் இதற்குக் காரணம். அதனால் துபாய்க்கு அவர்கள் நிறைய நம்பிக்கையுடன் சென்று இருக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக தோற்று டோர்னமென்ட் துவங்கியது. ஆனால், இந்தியா பங்களாதேஷை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று வெற்றியை துவக்கி இருக்கிறது. 

அணிகள்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி.


பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், இமாம்-உல்-ஹக், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தய்யப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி. 

IND vs PAK | இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம் ! இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!