- Home
- Sports
- IND vs PAK: இந்தியா பாகிஸ்தான் போட்டியை எந்த டிவி, ஓடிடியில் பார்க்கலாம்? எப்போது தொடங்கும்?
IND vs PAK: இந்தியா பாகிஸ்தான் போட்டியை எந்த டிவி, ஓடிடியில் பார்க்கலாம்? எப்போது தொடங்கும்?
india vs pakistan: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. இந்த போட்டி எப்போது, எந்த நேரத்தில் தொடங்குகிறது? எங்கே டிவி, ஓடிடியில் இலவசமாக பார்க்கலாம் என்ற விவரங்களை பார்ப்போம்.

IND vs PAK: இந்தியா பாகிஸ்தான் போட்டியை எந்த டிவி, ஓடிடியில் பார்க்கலாம்? எப்போது தொடங்கும்?
india vs pakistan: சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது. 2-வது போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய ரோகித் படை வங்கதேசத்தை பந்தாடி விட்டது. இப்போது தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் நாளை மோதுகிறது.
இந்தியா பாகிஸ்தான் போட்டி
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இரு நாட்டு ரசிகர்களுடன் கிரிக்கெட் ரசிகர்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே இருதரப்பு தொடர்கள் நடைபெறவில்லை. இந்த இரண்டு அணிகளும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே மோதுகின்றன. இதனால் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்த போட்டி எப்போது நடக்கும்? எங்கே நடக்கும்? எங்கே இலவசமாக பார்க்கலாம் என்ற விவரங்களை காணலாம்.
IND vs PAK பிட்ச் ரிப்போர்ட்: துபாய் பிட்ச் யாருக்கு சாதகம்? முழு விவரம் இதோ!
சாம்பியன்ஸ் டிராபி
இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது நடக்கும்?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை (நாளை) நடக்கிறது. போட்டி இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் மதியம் 2 மணிக்கு போடப்படும்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி எங்கே நடக்கும்?
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டி யுஏஇ-யில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை எதில் பார்க்கலாம்?
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை எங்கே இலவசமாக பார்க்கலாம்?
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டியை டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்கலாம். அதேபோல், மொபைல் ஆப் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். ஜியோ ஹாட் ஸ்டார் இணையதளத்திலும் பார்க்கலாம். மேலும் நீங்கள் ஏசியாநெட் நியூஸ் தமிழில் லைவ் அப்டேட்கள், போட்டி தொடர்பான அனைத்து பிற செய்திகளையும் படிக்கலாம்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள்
சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள்:
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர்.
பாகிஸ்தான்: இமாம் உல் ஹக், பாபர் ஆஜம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சல்மான் அகா, தய்யப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவுப், அப்ரார் அஹ்மத், முகமது ஹஸ்னைன், உஸ்மான் கான், கம்ரான் குலாம், ஃபஹீம் அஷ்ரப்.
IND vs PAK: சுப்மன் கில் vs பாபர் அசாம்: கலக்கப் போவது இந்திய இளவரசரா? பாகிஸ்தான் சூப்பர் ஸ்டாரா?