IND vs AUS: 2ஆவது ஒரு நாள் போட்டியில், இந்தியா பிளேயிங் 11 எப்படி இருக்கும்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று இந்தூரில் நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று இந்தூரில் 2ஆவது ஒரு நாள் போட்டி நடக்கிறது. இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக பிரஷித் கிருஷ்ணா இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், முதல் ஒரு நாள் போட்டியில் பந்து வீச்சில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பேட்டிங்கிலும் இந்தியா சிறப்பாக விளையாடியது. சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் முதல் விக்கெட்டிற்கு 141 ரன்கள் குவித்தனர். இதே போன்று சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும், கேஎல் ராகுல் 58 ரன்களும் எடுத்தனர்.
Hangzhou 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மகளிர் டீம் இந்தியா; பதக்கம் உறுதி!
இன்று நடக்கும் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்று கைப்பற்றும். ஒரு வேளை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரானது 1-1 என்று சமனாகும். ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் ஆடம் ஜம்பா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் சீன் அபாட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இரு அணிகளும் இதுவரையில் நேருக்கு நேர் மோதிய 147 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 55 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 82 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 6 ஒரு நாள் போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணி 4 முறையும், 2ஆவது பேட்டிங் ஆடிய அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 320 ரன்களும், ஆவரேஜ் 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 267 ரன்களும் ஆகும்.
இந்த மைதானத்தின் அதிகபட்ச ஸ்கோர் 418/5, இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்
குறைந்தபட்ச ஸ்கோர் 225/10, தென் ஆப்பிரிக்கா – இந்தியா
சேஸ் செய்ய்ப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் – 294/5, இந்தியா – ஆஸ்திரேலியா
குறைந்தபட்ச ஸ்கோர் எடுத்து தோல்வி – 247/9, இந்தியா – தென் ஆப்பிரிக்கா
இன்று நடக்கும் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியா பிளேயிங் 11:
சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி.
ஆஸ்திரேலியா பிளேயிங் 11:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், கேமரூன் க்ரீன், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ ஷார்ட், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபாட், ஆடம் ஜம்பா.
இந்திய அணியின் முக்கிய வீரர்கள்:
சுப்மன் கில்:
இதுவரையில் சுப்மன் கில் விளையாடிய 34 ஒரு நாள் போட்டிகளில் 1813 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 208 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 5 முறை சதமும், 9 முறை அரைசதமும் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த போட்டியில் 74 ரன்கள் எடுத்தார்.
ஜஸ்ப்ரித் பும்ரா:
இதுவரையில் விளையாடிய 77 போட்டிகளில் 126 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்து வீச்சாக 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்கள்:
பேட் கம்மின்ஸ்:
இதுவரையில் விளையாடிய 76 போட்டிகளில் 125 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இதில் சிறந்த பந்து வீச்சாக 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
மார்கஸ் ஸ்டோய்னிஸ்:
சிறந்த ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் 64 ஒரு நாள் போட்டிகளில் 1400 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 44 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். சிறந்த பந்து வீச்சாக 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் குவிக்கும்?
இந்தியா அல்லது ஆஸ்திரேலியா – 300 ரன்களுக்கு மேல்.
இன்றைய போட்டியில் சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருது பெற வாய்ப்பிருக்கிறது. மேலும், அதிக ரன்கள் எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அதிக விக்கெட்டுகள் கைப்பற்ற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
முதல் விக்கெட்டானது 20 ரன்களுக்குள் விழும் என்று சொல்லப்படுகிறது.
முதல் ஓவரில் 4 ரன்கள் எடுக்கபட வாய்ப்பு உண்டு. சுப்மன் கில் அதிக பவுண்டரியும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிக சிக்ஸர்களும் அடிக்க வாய்ப்பு உண்டு.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.