Hangzhu 2023 Rowing: படகுப் போட்டியில் இந்தியாவிற்கு 2 வெள்ளி, 2 வெண்கலம்: பதக்க பட்டியலில் 2ஆவது இடம்!
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த படகு போட்டியில் இந்தியாவிற்கு 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடக்க இருந்த 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் கொரோனா காரணமாக இந்த ஆண்டு 2023 நடந்து வருகிறது. சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். நேற்று நடந்த தொடக்க விழாவில் அனைத்து அணிகளும் சிறப்பு அணி வகுப்பு நடத்தினர். இந்தியா சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் லோவ்லினா போர்கோஹைன் இருவரும் இணைந்து தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நடந்தினர்.
Hangzhou 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மகளிர் டீம் இந்தியா; பதக்கம் உறுதி!
இதையடுத்து இன்று காலை முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த மகளிருக்கான கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டி நாளை காலை 11.30 மணிக்கு நடக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு நடந்த படகு போட்டியில் இந்தியாவிற்கு 2 வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் லைட்வெயிட் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜட் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர். இதே போன்று படகோட்டுதலில் நடந்த மற்றொரு இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் லெக் ராம் மற்றும் பாபு லால் யாதவ் ஆடவர் ஜோடி இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன், இந்தியாவின் மூன்றாவது பதக்கத்தையும், இரண்டாவது படகுப் பதக்கத்தையும் வென்றனர்.
இதன் மூலமாக இந்தியா 3 வெள்ளிப் பதக்கமும் ,2 வெண்கலப் பதக்கமும் பெற்று பதக்கப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. சீனா 11 தங்கமும், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது.