ஆசிய விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், இன்று நடந்த முதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி பதக்கம் கைப்பற்றியதோடு இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இன்று நடந்த முதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியதோடு இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தனர். இந்தப் பிரிவில் போட்டியிட்ட ரமிதா, மெஹுலி கோஷ், ஆஷி சௌக்சே ஆகியோர் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.
இந்த வெற்றி குறித்து பேசிய சௌக்சே கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பதக்கம் வெல்வதற்காக உறுதியாகவும், அதற்கு தயாராகவும் இருந்த நிலையில், இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை கைப்பற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார். ஆனால், சீனா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
ஆனால் தனிப்பிரிவில் போட்டியிட்ட ரமிதா 2 ஆவது இடமும், மெஹூலி கோஷ் 5ஆவது இடமும் பிடிக்க ஆஷி சௌக்சே 29ஆவது இடம் பிடித்தார்.
