T20 WC:நியூயார்க்கில் இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை 2024: 930 ஏக்கரில் பார்க்கில் கிரிக்கெட் மைதானம்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியை நியூயார்க்கில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IND vs PAK match will be played in front of 34,000 people in New York City in upcoming T20 World Cup 2024?

ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடர் நடந்தது. தென் ஆப்பிரிக்கா நடத்திய இந்த டி20 உலகக் கோப்பையை முதல் முறையாக இந்தியா கைப்பற்றியது. இந்த டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறை கைப்பற்றியுள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

World Cup 2023:என்ன சோனமுத்தா போச்சா….இந்தியாவிடம் வாங்கிய அடி அப்படி – கேப்டன் பொறுப்பிலிருந்து ஷனாகா விலகல்?

கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது. இதைத் தொடர்ந்து வரும் 2024 ஆம் ஆண்டு 9ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்த உள்ளன. இந்த நிலையில், தான் 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடருக்கான மைதானங்களில் ஒன்றை ஐசிசி விரைவில் வெளியிட உள்ளது.

இப்படியொரு முன்னேற்றமா? எல்லாம் ஆசிய கோப்பை ஃபைனல் செய்த வேலை: நம்பர் 1 இடத்தில் முகமது சிராஜ்!

இந்த மைதானமானது நியூயார்க்கிற்கு கிழக்கில் கிட்டத்தட்ட 30 மைல் தொலைவில் 34 ஆயிரம் இருக்கைகள் கொண்ட போர்ட்டபிள் மைதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக, மன்ஹாட்டனுக்கு கிழக்கில் 30 மைல் தொலைவில் உள்ள லாங் தீவில் உள்ள ஐசனோவர் பூங்காவில் கிட்டத்தட்ட 930 ஏக்கர் புல்வெளியில் இந்த மைதானம் கட்டப்பட உள்ளது. மேலும், இந்த மைதானத்தில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

World Cup Anthem: உலகக் கோப்பைக்கான ஆந்தம் பாடல் வீடியோவில் ரன்வீர் சிங்: ப்ரிதம் இசையில் வைரலாகும் வீடியோ!

இது குறித்து ஐசிசி மற்றும் நியூயார்க் அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையானது தோல்வி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதாவது, ஐசனோவர் பூங்காவைச் சுற்றி வசிக்கும் சில மக்கள் மற்றும் அதே பூங்காவை அடிப்படையாகக் கொண்ட கிரிக்கெட் லீக் ஒன்றின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, நகர அதிகாரிகள் பிராங்க்ஸின் திட்டங்களை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முதல் உலகக் கோப்பையிலேயே துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம்: தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை!

பிராங்க்ஸின் இழப்பின் விளைவாக நாசாவ் கவுண்டி ஆதாயமடைந்தது, ஏனெனில் ஐசனோவர் பூங்காவை நடத்தும் பொறுப்பில் உள்ள நாசாவ் கவுண்டி பிரதிநிதிகளுடன் ஐசிசி பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மன்ஹாட்டனுக்கு கிழக்கே 30 மைல் தொலைவில் உள்ள லாங் தீவில் உள்ள குக்கிராமமான கிழக்கு புல்வெளியில் 930 ஏக்கர் ஐசனோவர் பூங்காவில் இந்த இடம் கட்டப்படும். இந்த இடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலையும் நடத்தும் என்று நம்பப்படுகிறது.

CWC 2023: இழுபறியில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்: உலகக் கோப்பைக்கான அணி வீரர்களை அறிவிப்பதில் தாமதம் ஏன்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios