World Cup 2023:என்ன சோனமுத்தா போச்சா….இந்தியாவிடம் வாங்கிய அடி அப்படி – கேப்டன் பொறுப்பிலிருந்து ஷனாகா விலகல்?
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் நடந்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாள் என்று 6 அணிகள் இடம் பெற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங் தேர்வு செய்தார்.
இப்படியொரு முன்னேற்றமா? எல்லாம் ஆசிய கோப்பை ஃபைனல் செய்த வேலை: நம்பர் 1 இடத்தில் முகமது சிராஜ்!
அதன்படி இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக பதும் நிஷாங்கா மற்றும் குசால் பேரேரா இருவரும் களமிறங்கினர். இதில், பெரேரா டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த டாப் பேட்ஸ்மேன்கள், முகமது சிராஜ் ஓவரில் ஆட்டமிழந்தனர். சிராஜ் மட்டுமே 6 விக்கெட்டுகள் கைப்பற்ற ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியாக இலங்கை, 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் ஆடிய இந்தியா 51 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 8ஆவது முறையாக ஆசிய கோப்பை சாம்பியனானது. இந்த நிலையில், அடுத்த மாதம் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில், இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை ஷனாகா கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினால், அடுத்து இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் கேப்டனாக பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மெண்டிஸ் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் விளையாடி 54 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவ்வளவு ஏன், கடந்த 2022 நடந்த 33 போட்டிகளில் விளையாடி 489 ரன்கள் குவித்தார்.
முதல் உலகக் கோப்பையிலேயே துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம்: தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை!
ஆனால், ஷனாகா தலைமையிலான இலங்கை அணி கடந்த ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியது. மேலும், தொடர்ந்து 13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு பேசிய ஷனாகா கூறியிருந்ததாவது: அதிக எண்ணிக்கையில் வந்த ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன், நாங்கள் உங்களை ஏமாற்றியதற்கு வருந்துகிறோம். கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். மேலும் அவர்கள் விளையாடும் கிரிக்கெட்டின் பிராண்டிற்காக இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்று தசுன் கூறினார்.