இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி உள்பட 9 போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டு உலகக் கோபைக்கான அட்டவணை மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. கடந்த ஜூன் 27 ஆம் தேதி உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை வெளியானது. அதன் படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடக்கிறது. ஆனால், அக்டோபர் 15 ஆம் தேதி நவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில், போக்குவரத்து பாதிப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறி வந்தனர். அதோடு, போட்டியையும் மாற்றி வைக்க வேண்டும் என்று பல மாநில அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

Asian Champions Trophy Hockey:இந்தியா – பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதிய போட்டிகள் – ரெக்கார்ட்ஸ் என்ன சொல்லுது?

இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி உள்பட 9 போட்டிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. இந்தப் போட்டியானது அகமதாபாத் மைதானத்தில் தான் நடக்கிறது. போட்டி தேதியில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், போட்டி நடக்கும் மைதானங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

WI vs IND 3rd T20 Matchல் விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்!

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது, அக்டோபர் 14 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 15 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தப் போட்டி டெல்லி மைதானத்தில் நடக்கிறது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டியானது அக்டோபர் 12 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 10 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியானது, அக்டோபர் 13 ஆம் தேதியிலிருந்து ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 12 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியானது, லக்னோவில் நடக்கிறது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டியை தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அக்டோபர் 14 ஆம் தேதி நடக்க இருந்த நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியானது, அக்டோபர் 13ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியானது, சென்னையில் நடக்கிறது.

கடைசி லீக் போட்டிகள் ஒரே நாளில் நடக்கும் வகையில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12 ஆம் தேதி புனேயில் நடக்கும் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியானது, நவம்பர் 11 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. இந்தப் போட்டி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதே போன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தாவில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்தியது – பங்கஜ் சவுத்ரி!

இதே போன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டியானது, நவம்பர் 11 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 12 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி பெங்களூரு மைதானத்தில் நடக்கிறது.