Asian Champions Trophy Hockey:இந்தியா – பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதிய போட்டிகள் – ரெக்கார்ட்ஸ் என்ன சொல்லுது?

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் ரவுண்ட் ராபின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

India vs Pakistan head-to-head matches - What do the records say?

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. கடந்த 3 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

WI vs IND 3rd T20 Matchல் விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்!

தற்போது வரையில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்தியா 3ல் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது. மலேசியாவும் 3 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து 9 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. 3ஆவது இடத்தில் கொரியா உள்ளது. 2 போட்டிகளில் டிராவும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டியை தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பாகிஸ்தான் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து, 2 போட்டிகளில் டிரா ஆன நிலையில், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. கடைசி 2 இடங்களில் ஜப்பான் மற்றும் சீனா அணிகள் உள்ளன. ஒரு போட்டியில் கூட இரு அணிகளும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கடைசி ரவுண்ட் ராபின் லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!

இதுவரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மொத்தமாக 179 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்தியா 64 போட்டிகளிலும், பாகிஸ்தான் 82 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. எனினும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த 10 போட்டிகளில் இந்தியா 8ல் வெற்றி கண்டுள்ளது. 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

பிசிசிஐ ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்தியது – பங்கஜ் சவுத்ரி!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய கடைசி 5 போட்டிகள்:

2022 – ஆசிய கோப்பை – இந்தியா – பாகிஸ்தான் – 1-1 டிரா

2021 – ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி – இந்தியா பாகிஸ்தான் – 4-3 இந்தியா வெற்றி

2021 – ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி – இந்தியா பாகிஸ்தான் – 3-1 இந்தியா வெற்றி

2018 – ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியா – பாகிஸ்தான் – 2-1 இந்தியா வெற்றி.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios