இந்தியா – பாகிஸ்தான் போட்டியை தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இன்று நடக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான கடைசி ரவுண்ட் ராபின் லீக் போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Chief Minister M. K. Stalin will start the India-Pakistan asian champions trophy match today at Chennai Egmore

சென்னையில் 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. கடந்த 3 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 12 ஆம் தேதி வரையில் நடக்கிறாது. இதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

கடைசி ரவுண்ட் ராபின் லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!

தற்போது வரையில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்தியா 3ல் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது. மலேசியாவும் 3 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து 9 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. 3ஆவது இடத்தில் கொரியா உள்ளது. 2 போட்டிகளில் டிராவும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.

பிசிசிஐ ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்தியது – பங்கஜ் சவுத்ரி!

பாகிஸ்தான் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து, 2 போட்டிகளில் டிரா ஆன நிலையில், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. கடைசி 2 இடங்களில் ஜப்பான் மற்றும் சீனா அணிகள் உள்ளன. ஒரு போட்டியில் கூட இரு அணிகளும் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் ஜப்பான் மற்றும் சீனா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரவு 6.15 மணிக்கு மலேசியா மற்றும் கொரியா அணிகள் மோதுகின்றன. இறுதியாக ரவுண்ட் ராபின் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சஹால் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!

சென்னை எழும்பூரில் உள்ள மேயர ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதோடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எனினும், இந்தப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற பாகிஸ்தானை எதிர்த்து கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திலக வர்மாவை அரைசதம் அடிக்கவிடாமல் போட்டியை முடித்து கொடுத்த ஹர்திக் பாண்டியா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios