சஹால் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடந்த போட்டியில் காயம் காரணமாக இடம் பெறாத குல்தீப் யாதவ் இந்தப் போட்டியில் இடம் பெற்று விளையாடினார். முக்கியமான விக்கெட்டுகளான பிராண்டன் கிங், சார்லஸ் ஜான்சன், நிக்கோலஸ் பூரன் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
திலக வர்மாவை அரைசதம் அடிக்கவிடாமல் போட்டியை முடித்து கொடுத்த ஹர்திக் பாண்டியா!
மொத்தமாக 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக 30 டி20 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகள் கைப்பற்றி யுஸ்வேந்திர சஹால் சாதனையை முறியடித்துள்ளார். சஹால், 34 போட்டிகள் விளையாடி 50 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மார்க் அடையர் 28 போட்டிகளிலும், அஜந்தா மெந்திஸ் 26 போட்டிகளிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-2 என்று கைப்பற்றியிருக்கிறது. இன்னும் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும், ஏதாவது ஒன்றில் வெற்றி பெற்றால் தொடரில் தோல்வி அடையும். இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 12 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான 4ஆவது டி20 போட்டி நடக்கிறது. இதையடுத்து 13 ஆம் தேதி 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கிறது.
31ஆவது உலக பல்கலைக்கழக போட்டியில் 26 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை - பிரதமர் மோடி பாராட்டு!