WI vs IND 3rd T20: வான வேடிக்கை காட்டிய சூர்யகுமார் யாதவ் – வின்னிங் ஷாட் அடித்து கொடுத்த ஹர்திக் பாண்டியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

India Beat West Indies by 7 wickets difference in 3rd T20 at Providence Stadium, Guyana

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கைல் மேயர்ஸ் 25 ரன்களும், ஜான்சன் சார்லஸ் 12 ரன்கௌம், நிக்கோலஸ் பூரன் 20 ரன்களும், பிராண்டன் கிங் 42 ரன்களும் ஆட்டமிழந்தனர்.

31ஆவது உலக பல்கலைக்கழக போட்டியில் 26 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை - பிரதமர் மோடி பாராட்டு!

ஒருபுறம் அதிரடியாக விளையாடிய ரோவ்மன் பவல் 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உள்பட 40 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்து வீச்சு தரப்பில் இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகேஷ் குமார் ஒரு விக்கெட்டும், அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

WI vs IND 3rd T20: இஷான் கிஷானை நீக்கிய இந்தியா: டி20 போட்டியில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதே போன்று தொடர்ந்து 2 போட்டிகளிலும் சொதப்பிய சுப்மன் கில் இந்தப் போட்டியிலும் சொதப்பினார். அவர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து வான வேடிக்கை காட்டினர்.

இதில், சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியில் தனது 14ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் இதுவரையில் 51 போட்டிகளில் விளையாடி 1762 ரன்கள் குவித்தார். இதில், 14 அரைசதம், 3 சதம், 162 பவுண்டரிகள், 101 சிக்ஸர்கள் அடங்கும்.

ஆஸ்திரேலியா அணியில் 4ஆவது இந்திய வீரர்: உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்ற தன்வீர் சங்கா!

கடைசியாக ஹர்திக் பாண்டியா வந்து சிக்ஸர் அடித்துக் கொடுக்க இந்தியா 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திலக் வர்மா, 37 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி உள்பட 49 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

இதன் மூலமாக கடைசி 3 டி20 போட்டிகளில் 30 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ்விற்க் அடுத்தபடியாக திலக் வர்மா படைத்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி 12 ஆம் தேதி புளோரிடாவில் நடக்கிறது. கடைசி டி20 போட்டியும் 13 ஆம் தேதி புளோரிடாவில் நடக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு அரை ஏக்கர்ல நிலமா? என்ன சார் சொல்றீங்க? தொடர் நாயகன் விருதும் கூட…அடி தூள் தான்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios