வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு அரை ஏக்கர்ல நிலமா? என்ன சார் சொல்றீங்க? தொடர் நாயகன் விருதும் கூட…அடி தூள் தான்!
நடந்து முடிந்த குளோபல் டி20 தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற வெஸ்ட் இண்டீஸ் வென்ற ரூதர்போர்டுக்கு அமெரிக்காவில் அரை ஏக்கரில் நிலம் வழங்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடர் போன்று ஒவ்வொரு மாநிலத்திலும், வெளிநாடுகளிலும் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனடாவில் குளோபல் டி20 தொடர் நடந்தது. இதில் பாந்தர்ஸ், வோல்ஸ், டொரோண்டோ நேஷனல்ஸ், வான்காவுர் நைட்ஸ், சுர்ரே ஜாக்குவார்ஸ், மோண்ட்ரியல் டைகர்ஸ் என்று 6 அணிகள் பங்கேற்றன.
புதிய பிளான் போட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம்!
கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் கடந்த 6ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் சர்ரே ஜாக்குவார்ஸ் அணியும், மாண்ட்ரியா டைகர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சர்ரே ஜாக்குவார்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக ஜத்திந்தர் சிங் 57 பந்துகளில் 56 ரன்களும், அயான் கான் 15 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர்.
WI vs IND 3rd T20: பதிலடி கொடுக்குமா இந்தியா? ஒரு தொடரை கூட கைப்பற்றாத வெ.இ, வரலாற்றை மாற்றுமா?
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய மாண்ட்ரியல் டைகர்ஸ் அணி 12 ஓவர்களில் 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் தடுத்து தடுமாறியது. அதன் பிறகு ரூதர்போர்டு மற்றும் திபேந்திர சிங் கூட்டணி சேர்ந்து நிதானமான விளையாடி ரன்கள் சேர்த்தனர். அதில் திபேந்திர சிங் 16 ரன்களி ஆட்டமிழக்க கடைசியாக வந்த ஆண்ட்ரே ரஸ 6 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
மோசமான ஃபார்மை வெளிப்படுத்தும் சுப்மன் கில், சஞ்சு சாம்சன் – யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பா?
ரூத்ர்போர்ட் 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். குளோபல் டி20 தொடரை மான்ட்ரியல் அணி வென்றதை விடவும், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ரூதர்போர்ட்-க்கு வழங்கப்பட்டது. பொதுவாக ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.
ஆனால், குளோபல் டி20 லீக் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற ரூதர்போர்டுக்கு அமெரிக்காவில் அரை ஏக்கம் நிலம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Hockey: தென் கொரியாவை எதிர்கொள்ளும் இந்தியா: நம்பர் 1 இடத்தில் நீடிக்குமா?