மோசமான ஃபார்மை வெளிப்படுத்தும் சுப்மன் கில், சஞ்சு சாம்சன் – யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பா?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இன்று நடக்கும் 3ஆவது டி20 போட்டியில் நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி இன்று கயானா மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று விட்டால், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றும்.
கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!
நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளிலும் சுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர். 2ஆவது டி20 போட்டியில் இருவரும் 7, 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதற்கு முன்னதாக முதல் டி20 போட்டியில் கில் 3 ரன்னிலும், சாம்சன் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வாய்ப்புக்காக போராடி வந்த சஞ்சு சாம்சனுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் சொற்ப ரன்களில் வெளியேறி கொடுக்கும் வாய்ப்பை எல்லாம் கோட்டைவிட்டு வருகிறார்.
Hockey: தென் கொரியாவை எதிர்கொள்ளும் இந்தியா: நம்பர் 1 இடத்தில் நீடிக்குமா?
இதன் காரணமாக இன்று நடக்கும் போட்டியில் ஒன்று சாம்சனுக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறக்கப்படலாம். இல்லையென்றால், சுப்மன் கில்லிற்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கலாம் என்று தெரிகிறது. இதற்கு முன்னதாக ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை படைத்தார். முதல் டெஸ்ட் போட்டியில் 171 ரன்கள் எடுத்தார். 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 57 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 38 ரன்களும் எடுத்தார். ஒரு நாள் போட்டிகளில் அவர் இடம் பெறவில்லை. தற்போது இன்று நடக்கும் 3ஆவது டி20 போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்பிப்பதாக கூறப்படுகிறது.
முதல் அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணித்த திலக் வர்மா; வைரலாகும் வீடியோ!