கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

தென் கொரியாவுக்கு எதிராக நேற்று நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

India Beat Korea by 3-2 and entered into semi finals

கடந்த 3 ஆம் தேதி முதல் 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. வரும் 12 ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை ஆண்களுக்கான ஆசிய ஹாக்கி டிராபியை கைப்பற்றியுள்ளன. தென் கொரியா அணி ஒரு முறை டிராபியை கைப்பற்றி உள்ளது.

Hockey: தென் கொரியாவை எதிர்கொள்ளும் இந்தியா: நம்பர் 1 இடத்தில் நீடிக்குமா?

இந்த நிலையில், 5ஆவது நாளாக நேற்று நடந்த போட்டியில் ஜப்பான் மற்றும் மலேசியா அணிகள் மோதின. இதில், புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள மலேசியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சீனா அணிகள் மோதின. கடைசியாக பாகிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது பாகிஸ்தான் அணியின் முதல் வெற்றியாகும்.

யாரை கழற்றிவிட்டு, யார சேர்த்திருக்காங்க தெரியுமா? உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

இதையடுத்து நடந்த கடைசி போட்டியில் இந்தியா மற்றும் கொரியா அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 6ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் நீலகண்ட சர்மா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து 12 ஆவது நிமிடத்தில் கொரிய வீரர் ஸுங்ஹ்யுன் கிம் ஒரு கோல் அடித்தார். அதன் பிறகு 23 ஆவது நிமிடத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 2ஆவது கோல் அடித்தார். இதையடுத்து முதல் அரை மணி நேரம் முடிந்து 2ஆவது அரை மணி நேரம் ஆரம்பமானது. அதில், மந்தீப் சிங் 3ஆவது கோல் அடித்தார்.

முதல் அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணித்த திலக் வர்மா; வைரலாகும் வீடியோ!

இதன் மூலமாக இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்னர், சுதாரித்துக் கொண்ட கொரிய வீரர் ஜிஹுன் யாங் 58ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இறுதியாக போட்டி நேரம் முடிய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios