ஆஸ்திரேலியா அணியில் 4ஆவது இந்திய வீரர்: உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்ற தன்வீர் சங்கா!
உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் உத்தேச அணியை ஆஸ்திரேலியா அறிவித்தது. இதில், இந்திய குடும்பத்தைச் சேர்ந்த தன்வீர் சங்கா இடம் பெற்றுள்ளார்.
இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. 10 அணிகள் இடம் பெற்று இந்தியா முழுவதும் 10 மைதானங்களில் இந்தப் போட்டி தொடர் நடத்தப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக் கோப்பை தொடரை இந்தியா இதுவரையில் 2 முறை கைப்பற்றியுள்ளது.
ஆஸ்திரேலியா 5 முறை சாம்பியனாகியுள்ளது. இதுவரையில் 12 உலகக் கோப்பை தொடர்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது.
புதிய பிளான் போட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம்!
உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா உத்தேச அணியை அறிவித்தது. இதில், டெஸ்ட் போட்டி வீரரான மார்னஷ் லபுஷேன் இடம் பெறவில்லை. ஆனால், அனுபவமில்லாத சிறந்த ஆல் ரவுண்டரான ஆரோன் ஹார்டி மற்றும் லெக் ஸ்பின்னரான தன்வீர் சங்கா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்ற தன்வீர் சங்கா ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 1990களில் பஞ்சாபின் ஜலந்தரில் இருந்து குடிபெயர்ந்த இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்ற சங்காவின் தந்தை ஒரு லாரி டிரைவராக அங்கு பணிபுரிகிறார். அவரது தாயார் ஒரு அக்கவுண்டண்ட்.
WI vs IND 3rd T20: பதிலடி கொடுக்குமா இந்தியா? ஒரு தொடரை கூட கைப்பற்றாத வெ.இ, வரலாற்றை மாற்றுமா?
சிட்னி தண்டர் அணிக்காக விளையாடிய சங்கா, 2020 ஆம் ஆண்டு தனது முதல் தர அறிமுகத்தில் ஈர்க்கப்பட்டார். இதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான அழைப்பை வெறும் 19 வயதில் பெற்றார். ஆஸ்திரேலியாவுக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது இந்திய வம்சாவளி வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார். அவருக்கு முன், குரிந்தர் சந்து, ஸ்டூவர்ட் கிளார்க் மற்றும் பிரான்ஸ்பி கூப்பர் போன்றோர் சாதனை படைத்துள்ளனர்.
பிக் பாஷ் லீக்கில், சங்கா தனது அறிமுக சீசனில் 14 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரை முதலில் சுழற்பந்து வீச்சாளர் ஃபவர்ட் அகமது கண்டுபிடித்தார். டீன் ஏஜ் பருவத்தில் வேகப்பந்து வீச்சாளராகத் தொடங்கினார். அவர் 2020 அண்டர்-19 உலகக் கோப்பையின் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ஒருவராக இருந்தார். 6 போட்டிகளில் 2 நான்கு விக்கெட்டுகள் மற்றும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மோசமான ஃபார்மை வெளிப்படுத்தும் சுப்மன் கில், சஞ்சு சாம்சன் – யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பா?
கீழ் முதுகு காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விளையாடாமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது உலகக் கோப்பை தொடர் மூலமாக அணிக்கு திரும்பியுள்ளார். இது உத்தேச அணி தான். உலகக் கோப்பைக்கான அணி வரும் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா உத்தேச அணி:
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சின் அப்பாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் க்ரீன், ஆரோன் ஹார்டி, ஜோஸ் ஹசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா