பிசிசிஐ ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்தியது – பங்கஜ் சவுத்ரி!
2021-22 ஆம் ஆண்டில் பிசிசிஐ ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்தியுள்ளது என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி 5 ஆண்டுகளின் வருமானம் மற்றும் செலவு விவரங்களை தெரிவித்தார்.
கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதோடு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது, அரசையும் பணக்காரராக்குகிறது. ஆம், எவ்வளவுக்கு எவ்வளவு வருமானம் ஈட்டுகிறதோ, அதற்கு ஏற்பவும் வருமான வரி செலுத்துகிறது. கடந்த 2021 – 22 ஆம் நிதி ஆண்டுகளில் பிசிசிஐ ரூ.1159 கோடி வரையில் வருமான வரி செலுத்தியது என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
சஹால் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பிசிசிஐ அளித்த வருமான வரி விவரங்களை தாக்கல் செய்தார். இதனுடன், கடந்த 5 ஆண்டுகளில் பிசிசிஐயின் வரவு, செலவு விவரங்களையும் பட்டியலிட்டார். பிசிசிஐ தாக்கல் செய்த வருமான வரி கணக்கை மேற்கோள் காட்டி அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
திலக வர்மாவை அரைசதம் அடிக்கவிடாமல் போட்டியை முடித்து கொடுத்த ஹர்திக் பாண்டியா!
கடந்த 2021 – 22 ஆம் நிதியாண்டி பிசிசிஐ ரூ.1,159.20 கோடியும், 2020 -21 ஆம் நிதியாண்டில் ரூ.844.92 கோடியும், வருமானவரி செலுத்தியதாக பங்கஜ் சவுத்ரி கூறினார். அதுமட்டுமின்றி 2021 – 22 ஆம் ஆண்டுகளில் பிசிசிஐ ரூ.7,606 கோடி வரையில் வருமானம் ஈட்டியது. அதே நேரத்தில் ரூ.3064 கோடி செலவும் செய்தது. அதற்கு முக்கிய காரணம் கொரோனா காலகட்டம் என்பதால் போட்டிகள் பயோ பபிள் முறையில் நடத்தப்பட்ட நிலையில் செலவுகள் அதிகரித்தது.
கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் பிசிசிஐ வருமானம் என்னவோ ரூ.4,735 கோடியாகவும், செலவு எனன்வோ ரூ.3080 கோடியாகவும் இருந்தது. 2019-20 ஆம் ஆண்டுகளில் ரூ.4972 கோடி வருமானம் ஈட்டியது. அதோடு ரூ.2268 கோடி ரூபாய் செலவும் செய்தது. 2018 -19 ஆம் ஆண்டுகளில் ரூ.7181 கோடி வருவாய் ஈட்டிய நிலையில் ரூ.4652 கோடி செலவு செய்தது. இதே போன்று 2017-18 ஆம் ஆண்டுகளில் ரூ.2916 கோடி வருவாய் ஈட்டிய நிலையில் ரூ.2105 கோடி ரூபாய் செலவும் செய்தது.
31ஆவது உலக பல்கலைக்கழக போட்டியில் 26 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை - பிரதமர் மோடி பாராட்டு!
வரும் ஆண்டுகளில் பிசிசிஐயின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22 நிதியாண்டு முதல் ஐபிஎல் ஊடக உரிமை ஒப்பந்தங்களில் Viacom18 உடன் ரூ.23,757.5 கோடி (டிஜிட்டல்) மற்றும் ரூ.1058 கோடி (மூன்று உலகப் பகுதிகள்) மற்றும் டிஸ்னி ஸ்டாருடன் ரூ.23,575 கோடி (தொலைக்காட்சி உரிமை) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மகளிர் பிரிமியர் லீக் அணிகள் ரூ.4669 கோடிக்கு விற்கப்பட்டன. இதன் ஊடக உரிமை ரூ.951 கோடிக்கு Viacom18 நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. ஐசிசியின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வருமானத்தில் 38.5 சதவீதம் பிசிசிஐக்கு கிடைக்கும். இதன் மூலம் ஓராண்டில் சுமார் ரூ.1,906.34 கோடி வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.