IND vs NED: இந்தியாவின் வெற்றிக்காக காத்திருக்கும் வங்கதேசம்: சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறுமா நெதர்லாந்து?
இந்தியாவிற்கு எதிராக இன்று நடக்கும் உலகக் கோப்பையின் 45ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றால் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும்.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணி 2025 ஆம் ஆண்டு நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும். இந்த நிலையில் தான் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று பெங்களூரு மைதானத்தில் நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும்.
ஆனால், இதுவரையில் விளையாடிய 8 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று நடக்கும் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகையால், புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகளே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும்.
இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 8ஆவது அணியாக வங்கதேச அணி தகுதி பெறும். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், 8ஆவது அணியாக வங்கதேச அணி தகுதி பெறும். நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தனது சாம்பியன்ஸ் டிராபி தொடர் கனவை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
புத்தாடைகள் அணிந்து கொண்டு ஒரு குடும்பமாக தீபாவளி கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்!
அரையிறுதிக்கு சென்ற 4 அணிகள்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான்
6ஆவது இடம் ஆப்கானிஸ்தான்
7ஆவது இடம் இங்கிலாந்து