2019ல 532 ரன்கள், 2023ல 215 ரன்கள்: பாதிக்கு பாதி கூட எடுக்கல பாஸ் – ஜானி பேர்ஸ்டோவை விளாசும் ரசிகர்கள்!

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ், நடப்பு உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 215 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

England Player Jonny Bairstow Scored 215 Runs in 9 innings in Cricket World Cup 2023 rsk

இந்தியாவில் நடக்கும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. கடந்த 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியனானது.

புத்தாடைகள் அணிந்து கொண்டு ஒரு குடும்பமாக தீபாவளி கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்!

ஆனால், இந்த 2023 உலகக் கோப்பையில் விளையாடிய 9 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை தழுவிய அணி என்ற சாதனையோடு வெளியேறியது. எனினும் 2025 ஆம் ஆண்டு நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில், தான் இதுவரையில் விளையாடிய 9 போட்டிகளில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 33, 52, 2, 10, 30, 14, 0, 15, 59 என்று வரிசையாக சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மொத்தமாக 215 ரன்கள். ஆனால், கடந்த 2019 உலகக் கோப்பையில் விளையாடிய 11 இன்னிங்ஸில் 532 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 2 சதமும், 2 அரைசதமும் அடங்கும்.

தீபாவளி நாளைக்கு தான், இன்னிக்கே சரவெடியாய் வெடித்த மிட்செல் மார்ஷ் – ஆஸி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் 107 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 152 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று பென் ஸ்டோக்ஸூம் 84 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 108 ரன்கள் எடுத்துள்ளார். இந்த இருவர் தவிர மற்ற எந்த வீரரும் இங்கிலாந்து அணியில் சதம் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஜோ ரூட் மட்டுமே 1000 ரன்களை கடந்துள்ளார்.

வெற்றியோடு வீரநடை போட்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - பாகிஸ்தான் 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!

1034 – ஜோ ரூட்

897 – கிரகம் கூக்

769 – பென் ஸ்டோக்ஸ்

747 – ஜானி பேர்ஸ்டோவ்

718 – இயான் பெல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios