புத்தாடைகள் அணிந்து கொண்டு ஒரு குடும்பமாக தீபாவளி கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய அணி வீரர்கள் விதவிதமான ஆடைகள் அணிந்து கொண்டு தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.
ரோகித் சர்மா தீபாவளி கொண்டாட்டம்
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும், வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும் என்பார்கள். நாம் இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கும் போது வெளிச்சம் கிடைத்துவிடாதா என்று ஏங்கிக் கொண்டிருப்போம்.
சிராஜ், ஷமி, பும்ரா தீபாவளி கொண்டாட்டம்
வறுமை, கஷ்டம் எனும் இருள் நீங்கி தீப ஒளி என்ற வசந்த ஒளி நம் வாழ்வில் வீசாதா, நாம் குதூகலமாக இருக்கமாட்டோமா என்றெல்லாம் எண்ணம் தோன்றும். அப்படிப்பட்ட இருள் நீங்கி தீப ஒளி என்ற வெளிச்சம் ஒவ்வொருவரது வாழ்விலும் உண்டாக வாழ்த்துக்கள்.
விராட் கோலி தீபாவளி கொண்டாட்டம்
இந்த நிலையில் தான் இந்திய அணி வீரர்கள் தங்களது மனைவிகளுடனும், சக வீரர்களுடனும், நண்பர்களுடனும் தீபாவளியை கொண்டாடியுள்ளனர். விதவிதமான ஆடைகள் அணிந்து கொண்டு இந்திய அணி வீரர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
இந்திய அணி தீபாவளி கொண்டாட்டம்
ரோகித் சர்மா தனது மனைவி ரித்திகாவுடனும், விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடனும் தீபாவளியை கொண்டாடியுள்ளனர். தற்போது இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில், இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
முகமது ஷமி தீபாவளி கொண்டாட்டம்
அதோடு, அரையிறுதிப் போட்டிக்கும் முன்னேறியுள்ளது. இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குல்தீப், இஷான் கிஷான் தீபாவளி கொண்டாட்டம்
நேற்று நடந்த இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் 337 ரன்களை 6.4 ஓவர்களில் சேஸ் செய்ய தவறியதைத் தொடர்ந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.
சுப்மன் கில் தீபாவளி கொண்டாட்டம்
இதையடுத்து 4ஆவது அணியாக நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வரும் 15ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நடக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
ருதுராஜ் கெய்க்வாட் தீபாவளி கொண்டாட்டம்
இதில், தோனி ரன் அவுட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போட்டியில் திருப்பு முனை ஏற்பட்டது. கடைசியாக 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2ஆவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி வரும் 16ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.