நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பையின் 45ஆவது லீக் போட்டிக்கு முன்னதாக பெங்களூருவில் இந்திய அணி வீரர்கள் தீபாவளி கொண்டாடியுள்ளனர்.
நவம்பர் 12 ஆம் தேதி இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என்று பலரும் தங்களது தொண்டர்கள், ரசிகர்கள், நாட்டு மக்களுக்கு தங்களது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொருவரது வாழ்விலும் இருள் என்னும் வறுமை, கஷ்டம், துன்பம், துயரம் நீங்கி வெளிச்சம் எனும் தீப ஒளி வீசி வாழ்க்கை பிரகாசமாக ஏசியாநெட் நியூஸ் தமிழ் சார்பாக நாங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிலையில், இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் கடைசி மற்றும் 45ஆவது லீக் போட்டி இன்று பெங்களூருவில் நடக்கிறது. அதற்கு முன்னதாக இந்தியா அணி வீரர்கள் ஒரு குடும்பமாக இணைந்து பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புத்தாடைகள் அணிந்து கொண்டு ஒரு குடும்பமாக தீபாவளி கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்!
இந்தியா விளையாடிய 8 போட்டிகளிளும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிப் போட்டிக்கும் முன்னேறியுள்ளது. இதே போன்று நெதர்லாந்து அணியும் விளையாடிய 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
