Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் போன்று மழை பெய்தால் என்ன செய்வது? அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிப்பு!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.

ICC Confirms Reserve Day for Both Semi Finals and Finals in Cricket World Cup 2023 rsk
Author
First Published Nov 14, 2023, 12:27 PM IST

இந்தியாவில் நடந்து வரும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையானது வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிற்திப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் 1 மற்றும் 4ஆவது இடங்களில் உள்ள அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியிலும், 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் உள்ள அணிகள் 2ஆவது அரையிறுதிப் போட்டியிலும் மோதும்.

இந்தியா – நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் யாருக்கு வாய்ப்பு?

அதன்படி நாளை 15ஆம் தேதி நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டால் புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட்டில் அதிக புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

ரோகித் சர்மா சாதனையை முறியடித்து அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த கேஎல் ராகுல்!

ஆனால், போட்டியானது மழையால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் 2ஆவது நாள் போட்டி நடத்துவதை ஐசிசி உறுதி செய்துள்ளது. மேலும், அரையிறுதி போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று அறிவித்துள்ளது.

Rohit Sharma and Kapil Dev: ஒரு கேப்டனாக 40 ஆண்டுகளுக்கு பிறகு கபில் தேவ் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது விளையாடிய 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் +2.570 என்ற ரன் ரேட் கொண்டுள்ளது. ஆனால், நியூசிலாந்து விளையாடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் +0.743 என்று ரன் ரேட் கொண்டுள்ளது. வரும் 16 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதே போன்று நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இதற்கு முன்னதாக ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது மழை குறுக்கீடு ஏற்பட்ட நிலையில் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் 2ஆவது நாளில் போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ODI World Cup Semi Finals: உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கான அணிகளில் நடந்த முக்கியமான நிகழ்வு!

Follow Us:
Download App:
  • android
  • ios