Asianet News TamilAsianet News Tamil

ODI World Cup Semi Finals: உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கான அணிகளில் நடந்த முக்கியமான நிகழ்வு!

உலகக் கோப்பையின் 45ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்திற்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று 9ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

The most important event in World Cup history in the semi-final teams rsk
Author
First Published Nov 13, 2023, 8:17 AM IST | Last Updated Nov 13, 2023, 8:17 AM IST

இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும், 8 நாட்களில் இந்த தொடர் முடிந்து சாம்பியன் யார் என்பது தெரியப் போகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த 4 அணிகளிலும் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. அது என்ன என்று பார்க்கலாம். நேற்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டி நடந்தது. இதில், இந்தியா முதலில் விளையாடி 410 ரன்கள் குவித்தது. அதன் பிறகு கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக இந்தியா 9ஆவது வெற்றியை பெற்றது.

உலகக் கோப்பையில் முதல் முறையாக 9 பவுலர்களை பயன்படுத்திய டீம் இந்தியா!

இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இன்னும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா சாதனையை சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அரையிறுதி, இறுதிப் போட்டி உள்பட விளையாடிய 11 போட்டிகளிலும் வெற்றி பெற்ற சாம்பியனானது. இந்தியா 2003 ஆம் ஆண்டு 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. நியூசிலாந்து 2015ல் 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

பவுலிங் பவுலிங்குன்னு கோஷமிட்ட ரசிகர்கள்: 11 ஆண்டுகளுக்கு பிறகு 10ஆவது விக்கெட் கைப்பற்றிய ரோகித் சர்மா!

இந்திய அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இதே போன்று தென் ஆப்பிரிக்கா, இந்தியாவிடம் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணியானது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளிடம் தோல்வி அடைந்து 3ஆவது இடத்தில் உள்ளது. கடைசியாக நியூசிலாந்து அணியானது இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து 4ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா சாதனை!

இந்தியா – 9 வெற்றி

தென் ஆப்பிரிக்கா – இந்தியாவிடம் தோல்வி

ஆஸ்திரேலியா – இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி

நியூசிலாந்து – இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வி.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios