நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பையின் 45ஆவது லீக் போட்டியில் அரைசதம் அடித்ததோடு, பவுலிங்கில் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கேப்டனாக ரோகித் சர்மா இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 410 ரன்கள் குவித்தது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் உலகக் கோப்பை சதத்தை நிறைவு செய்தார். கேஎல் ராகுலும் சதம் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 128 ரன்கள் (நாட் அவுட்), கேஎல் ராகுல் 102 ரன்கள், ரோகித் சர்மா 61 ரன்கள், சுப்மன் கில் 51 ரன்கள், விராட் கோலி 51 ரன்கள் என்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக 50+ ஸ்கோர் எடுத்தனர்.

ODI World Cup Semi Finals: உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கான அணிகளில் நடந்த முக்கியமான நிகழ்வு!

பின்னர் ஆடிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர் வெஸ்லி பாரேஸி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் நெதர்லாந்து அணி விக்கெட்டுகளை இழந்த போதிலும் தனி ஒருவனாக தேஜா நிடமானுரு மட்டும் கடைசி வரை போராடி அரைசதம் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் சில மறக்க முடியாத சம்பவங்கள் நடந்துள்ளது. அதாவது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பவுலிங் செய்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸை 17 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழக்கச் செய்து ஒரு நாள் போட்டிகளில் தனது 5ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். தேஜா நிடமானுரு 39 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 54 ரன்கள் குவித்து ரோகித் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

உலகக் கோப்பையில் முதல் முறையாக 9 பவுலர்களை பயன்படுத்திய டீம் இந்தியா!

இதன் மூலமாக 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கேப்டனாக ரோகித் சர்மா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். மேலும், 7 ஆண்டுகளில் ஒரு நாள் போட்டிகளில் முதல் முறையாக ரோகித் சர்மா பவுலிங் செய்து விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். இறுதியாக நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், ஒரு கேப்டனாக ரோகித் சர்மா 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் சாதனையை சமன் செய்துள்ளார்.

பவுலிங் பவுலிங்குன்னு கோஷமிட்ட ரசிகர்கள்: 11 ஆண்டுகளுக்கு பிறகு 10ஆவது விக்கெட் கைப்பற்றிய ரோகித் சர்மா!

கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 20ஆவது லீக் போட்டியில் கபில் தேவ் 138 பந்துகளில் 16 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 175 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுலிங்கிலும் 11 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 32 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். தற்போது நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 54 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பவுலிங்கிலும் 0.5 பந்துகள் வீசி 7 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலமாக ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் ஒரு கேப்டனாக 50+ ஸ்கோர் எடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்ததோடு, கபில் தேவ் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா சாதனை!

Scroll to load tweet…