இந்தியா – நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் யாருக்கு வாய்ப்பு?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டால், புள்ளிப்பட்டியலில் நெட் ர்ன் ரேட் அடிப்படையில் முதலிடம் இருக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்தியாவில் நடந்து வரும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையானது வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிற்திப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் 1 மற்றும் 4ஆவது இடங்களில் உள்ள அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியிலும், 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் உள்ள அணிகள் 2ஆவது அரையிறுதிப் போட்டியிலும் மோதும்.
ரோகித் சர்மா சாதனையை முறியடித்து அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த கேஎல் ராகுல்!
அதன்படி நாளை 15ஆம் தேதி நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டால் புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட்டில் அதிக புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது விளையாடிய 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் +2.570 என்ற ரன் ரேட் கொண்டுள்ளது. ஆனால், நியூசிலாந்து விளையாடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் +0.743 என்று ரன் ரேட் கொண்டுள்ளது. ஆதலால், மழை பெய்து போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்தியா தான் இறுதி போட்டிக்கு முன்னேறும்.
ODI World Cup Semi Finals: உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கான அணிகளில் நடந்த முக்கியமான நிகழ்வு!