உலகக் கோப்பையில் இரட்டை சதம் அடித்து கிளென் மேக்ஸ்வெல் சாதனை – 21 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உடன் 201 நாட் அவுட்!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கிளென் மேக்ஸ்வெல் 201 ரன்கள் குவித்து இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவது வீரராக இடம் பிடித்துள்ளார்.

Glenn Maxwell become 3rd Player to hit Double Hundred in ODI World Cup History rsk

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் உலகக் கோப்பையின் 39ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜத்ரன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ரன் சேஸ் 287 ரன்கள் மட்டுமே. அதுவும் கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிராக 287 ரன்களை சேஸ் செய்துள்ளது. ஆதலால், இந்தப் போட்டியில் 291 ரன்களை சேஸ் செய்யுமா என்ற கேள்வி இருந்தது. அதற்கேற்பவும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரும் இருந்தது.

ருத்ரதாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் 201 நாட் அவுட் – வரலாற்று சாதனையோடு அரையிறுதிக்கு முன்னேற்றம்!

Glenn Maxwell become 3rd Player to hit Double Hundred in ODI World Cup History rsk

சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அதில், டிராவிஸ் ஹெட் 0, மிட்செல் மார்ஷ் 24, டேவிட் வார்னர் 18, ஜோஷ் இங்கிலிஸ் 0, மார்னஷ் லபுஷேன் 14 ரன் அவுட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6, மிட்செல் ஸ்டார் 3 என்று 18.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு கிளென் மேக்ஸ்வெல் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். உலகக் கோப்பையில் ஒரு நாள் போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் 200 ரன்களை கடந்து சாதனை மேல் சாதனை படைத்துள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மோசமான சாதனை – வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

Glenn Maxwell become 3rd Player to hit Double Hundred in ODI World Cup History rsk

அவர் 128 பந்துகளில் 21 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் உள்பட 201 ரன்கள் குவித்து உலகக் கோப்பையில் இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக மார்டின் குப்தில் 237*, கிறிஸ் கெயில் 215 ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர். இவர்களது பட்டியலில் தற்போது மேக்ஸ்வெல்லும் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் ரன் சேஸில் 201 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் மேக்ஸ்வெல் தான் சொந்தக்காரர். பேட் கம்மின்ஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இருவரும் இணைந்து 7ஆவது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளனர்.

முதல் முறையாக உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!

Glenn Maxwell become 3rd Player to hit Double Hundred in ODI World Cup History rsk

இந்தப் போட்டியில் 10 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஏபி டிவிலியர்ஸ் சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா அதிக ரன்களை சேஸ் செய்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்கள்:

201* - கிளென் மேக்ஸ்வெல் vs ஆப்கானிஸ்தான், 2023 WC

185* - ஷேன் வாட்சன் vs வங்கதேசம், 2011

181* - மேத்யூ ஹைடன் vs நியூசிலாந்து, 2007

179 – டேவிட் வார்னர் vs பாகிஸ்தான், 2017

178 – டேவிட் வார்னர் vs ஆப்கானிஸ்தான், 2015 WC

 

அதிவேகமாக இரட்டை சதம் அடித்த கிறிஸ் கெயில் சாதனையை மேக்ஸ்வெல் முறியடித்துள்ளார்.

Afghanistan vs Australia: இப்ராஹிம் ஜத்ரன் சதம், ரஷீத் கானின் அதிரடியால் ஆப்கானிஸ்தான் 291 ரன்கள் குவிப்பு!

Glenn Maxwell become 3rd Player to hit Double Hundred in ODI World Cup History rsk

அதிவேகமாக இரட்டை சதம் அடித்தவர்கள்:

126 பந்துகள் – இஷான் கிஷான் (இந்தியா) – வங்கதேசம், 2022

128 பந்துகள் – கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) – ஆப்கானிஸ்தான், 2023

138 பந்துகள் – கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) – ஜிம்பாப்வே, 2015

ஒரு நாள் போட்டிகளில் 6ஆவது வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்த கபில் தேவ் சாதனையை மேக்ஸ்வெல் முறியடித்துள்ளார். அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்பிலும் அவரது சாதனையை முறியடித்துள்ளார்.

Afghanistan vs Australia: சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்த இப்ராஹிம் ஜத்ரன்!

கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, 138 பந்துகளில் 175 ரன்கள் குவித்து கபில் தேவ் சாதனை படைத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

இதே போன்று தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது தனி ஒருவனாக 201 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

Glenn Maxwell become 3rd Player to hit Double Hundred in ODI World Cup History rsk

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios