Afghanistan vs Australia: இப்ராஹிம் ஜத்ரன் சதம், ரஷீத் கானின் அதிரடியால் ஆப்கானிஸ்தான் 291 ரன்கள் குவிப்பு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிராஅ உலகக் கோப்பையின் 39ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பையின் 39ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆப்கானிஸ்தான் வீரர்களை சந்தித்து பேசிய சச்சின் டெண்டுல்கர்: அரையிறுதிக்கு முன்னேறுமா ஆப்கானிஸ்தான்?
இதில், குர்பாஸ் 25 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரஹ்மத் ஷா களமிறங்கினார். நிதானமாக விளையாடிய ஷா 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அஷ்மதுல்லா உமர்சாய் 22 ரன்னில் ஆட்டமிழக்க முகமது நபி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தோல்வி: 3ஆவது அணியாக பரிதாபமாக வெளியேறிய இலங்கை!
ஒருபுறம் நிதானமாக விளையாடிய தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 131 பந்துகளில் உலகக் கோப்பையில் தனது முதல் சதம் அடித்தார். அதுமட்டுமின்றி உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 129 ரன்கள் எடுத்தார். இதில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். கடைசியாக வந்த ரஷீத் கான் 18 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாச ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்!
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் ஹசல்வுட் 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.