அரையிறுதி வாய்ப்பு யாருக்கு? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 39ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Afghanistan have won the toss and Choose to bat first against Australia in 39th Match of World Cup 2023 rsk

இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு சென்றுவிட்டன. வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. இந்த நிலையில், தான் இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு அமையும்.

Sri Lanka vs Bangladesh: நான் 2 நிமிடத்திற்குள் வந்துவிட்டேன் – வீடியோ ஆதாரத்தை பதிவிட்ட ஏஞ்சலோ மேத்யூஸ்!

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 8 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட அரையிறுதி வாய்ப்பை பெற்றுவிடும். மாறாக, 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஆப்கானிஸ்தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு அமையும்.

Sri Lanka vs Bangladesh: டைம் அவுட் முறையில் அவுட் கொடுத்தது ஏன்? வீடியோ ஆதாரத்துடன் நடுவர் விளக்கம்!

இதே போன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு அமையும். இந்த நிலையில் தான் இன்று மும்பையில் நடக்கும் 39ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தப் போட்டியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஃபசல்ஹக் ஃபரூக்கி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நவீன் உல் ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று ஆஸ்திரேலியா அணியிலும் மாற்றங்கள் செயப்பட்டுள்ளது. இதில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக, மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விராட் கோலிக்கு நான் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும்? இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ்!

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாகிடி (கேப்டன்), அஷ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன் உல் ஹக்.

ஆஸ்திரேலியா:

டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஷ் லபுஷேன், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசல்வுட்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios