Sri Lanka vs Bangladesh: டைம் அவுட் முறையில் அவுட் கொடுத்தது ஏன்? வீடியோ ஆதாரத்துடன் நடுவர் விளக்கம்!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று டெல்லியில் 38ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. முதலில் விளையாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் 279 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு விளையாடிய வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழந்து 282 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் ஏஞ்சலே மேத்யூஸ் 2 நிமிடத்திற்குள் களத்திற்கு வரவில்லை என்ற நிலையில் வங்கதேச வீரர்கள் அவுட் கேட்டுள்ளனர். இதற்கு நடுவர்கள் டைம் அவுட் முறையில் அவுட் கொடுத்துள்ளனர்.
விராட் கோலிக்கு நான் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும்? இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ்!
இந்த நிலையில், தான் தாம் 2 நிமிடத்திற்குள்ளாக களத்திற்கு வந்துவிட்டேன் என்றூ கூறி மேத்யூஸ் வீடியோ ஆதாரத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் தான் மேத்யூஸிற்கு அவுட் கொடுத்ததற்கான காரணம் குறித்து நடுவர் ஆட்ரின் ஹோல்ட் ஸ்டாக் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது எம்சிசியின் கிரிக்கெட் விதிப்படி தான் நடந்து வருகிறது. டைம் அவுட் முறைப்படி ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்த நிலையில், அடுத்த பேட்ஸ்மேன் 2 நிமிடத்திற்குள் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி: டைட்டில் வென்று பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சாதனை!
ஒரு பேட்ஸ்மேன் 2 நிமிடங்களுக்குள் களத்திற்கு வருகிறாரா இல்லையா என்பதை மூன்றாம் நடுவர் தான் வீடியோ மூலமாக பரிசோதனை செய்வார். ஆனால், மேத்யூஸ் களத்திற்கு வருவதற்கு 2 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக வங்கதேச வீரர்கள் அவுட் கேட்க, வீடியோ ஆதாரத்துடன் 3ஆம் நடுவர் கள நடுவருக்கு அவுட் வழங்கலாம் என்று கூறியதைத் தொடர்ந்து கள நடுவரும் அவுட் கொடுத்துள்ளார்.
மேலும், ஹெட்மெட் உடைந்த நிலையில், தான் அதனை மாற்ற சென்றேன் என்று மேத்யூஸ் கூறுகிறார். ஆனால், அவர் ஹெல்மெட் உடைந்துவிட்டது என்று கூறுவதற்கு முன்பே 2 நிமிடத்தை தாண்டிவிட்டார். இதன் காரணமாகத்தான் அவருக்கு அவுட் வழங்கினோம் என்று கூறியுள்ளார்.