விராட் கோலிக்கு நான் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும்? இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ்!
விராட் கோலி சதம் அடித்ததற்கு நான் ஏன், வாழ்த்து சொல்ல வேண்டும் என்று இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் சேர்த்தது. இதில், இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி 101 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலமாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும், விராட் கோலியின் நெருங்கிய நண்பருமான ஏபி டிவிலியர்ஸ் ஓடி வந்து வாழ்த்து தெரிவித்து.
FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி: டைட்டில் வென்று பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சாதனை!
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரையில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 83 ரன்கள் மட்டுமே எடுத்து 243 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் விராட் கோலிக்கு நான் ஏன் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது அவரிடம் விராட் கோலி 49ஆவது சதத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு நீங்கள் வாழ்த்து கூற விரும்புகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குசால் மெண்டிஸ் நான் எதற்காக அவருக்கு வாழ்த்து கூற வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லியில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்களின் பயிற்சி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பாத நிலையில், விராட் கோலியின் சதம் குறித்து கேள்வி எழுப்பியது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.