20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மோசமான சாதனை – வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 39ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 20 ஆண்டுகளுக்கு பிறகு 4 விக்கெட் இழந்து 49 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 39ஆவது லீக் போட்டி தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழந்து 291 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், இப்ராஹிம் ஜத்ரன் அதிகபட்சமாக 129 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் முறையாக உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!
அதன் பிறகு எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவிற்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதில், டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின் மிட்செல் மார்ஷ் 24 ரன்னிலும், டேவிட் வார்னர் 18 ரன்னிலும், ஜோஷ் இங்கிலிஸ் கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார்.
Afghanistan vs Australia: சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்த இப்ராஹிம் ஜத்ரன்!
இதன் மூலமாக ஆஸ்திரேலியா 8.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்திருந்தது. உலகக் கோப்பையில் 4 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களுக்கு குறைவாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்திருந்தது.
கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா:
15/4 vs வெஸ்ட் இண்டீஸ், மொஹாலி, 1996
32/4 vs இங்கிலாந்து லீட்ஸ் 1975
38/4 vs வெஸ்ட் இண்டீஸ் நாட்டிங்காம் 2019
47/4 vs நியூசிலாந்து க்யூபெர்கா 2003
48/4 vs இங்கிலாந்து, க்யூபெர்கா 2003
49/4 vs ஆப்கானிஸ்தான் மும்பை வான்கடே ஸ்டேடியம், 2023 *
அப்படி குறைவான ரன்கள் எடுத்திருந்தும் ஆஸ்திரேல்யா 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வெற்றியை நோக்கி தற்போது அஸ்திரேலியா விளாயாடி வருகிறது.
ஆப்கானிஸ்தான் வீரர்களை சந்தித்து பேசிய சச்சின் டெண்டுல்கர்: அரையிறுதிக்கு முன்னேறுமா ஆப்கானிஸ்தான்?