Asianet News TamilAsianet News Tamil

Afghanistan vs Australia: சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்த இப்ராஹிம் ஜத்ரன்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 39ஆவது லீக் போட்டியில் இப்ராஹிம் ஜத்ரன் சதம் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Ibrahim Zadran becomes the first Afghanistan batter to score a World Cup Hundred rsk
Author
First Published Nov 7, 2023, 7:15 PM IST | Last Updated Nov 7, 2023, 7:17 PM IST

மும்பை வான்கடே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பையின் 39ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Afghanistan vs Australia: இப்ராஹிம் ஜத்ரன் சதம், ரஷீத் கானின் அதிரடியால் ஆப்கானிஸ்தான் 291 ரன்கள் குவிப்பு!

இதில் தொடக்கம் முதல் நிதானமாக விளையாடி வந்த ஜத்ரன் அரைசதம் அடித்து அதனை சதமாகவும் மாற்றினார். அவர் 131 பந்துகளில் உலகக் கோப்பையில் தனது முதல் சதம் அடித்தார். அதுமட்டுமின்றி உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 129 ரன்கள் எடுத்தார். இதில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.

ஆப்கானிஸ்தான் வீரர்களை சந்தித்து பேசிய சச்சின் டெண்டுல்கர்: அரையிறுதிக்கு முன்னேறுமா ஆப்கானிஸ்தான்?

இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை இப்ராஹிம் ஜத்ரன் பெற்றார். மேலும், ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தோல்வி: 3ஆவது அணியாக பரிதாபமாக வெளியேறிய இலங்கை!

129* - இப்ராஹிம் ஜத்ரன் vs ஆஸ்திரேலியா, மும்பை – 2023

96 - சமியுல்லா ஷின்வாரி vs ஸ்காட்லாந்து, டுனெடின், 2025

87 – இப்ராஹிம் ஜத்ரன் vs பாகிஸ்தான், சென்னை, 2023

96 - Samiullah Shinwari vs SCOT, டுனெடின், 2015

86 – இக்ராம் அலிகில் vs வெஸ்ட் இண்டீஸ், லீட்ஸ், 2019

80 – ஹஷ்மதுல்லா ஷாகிடி vs இந்தியா, டெல்லி, 2023

80 – ரஹ்மானுல்லா குர்பாஸ் vs இங்கிலாந்து, டெல்லி, 2023

ஒரு நாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிக சதங்கள்:

6 - முகமது ஷேஜாத்

5 – ரஹ்மானுல்லா குர்பாஸ்

5 – ரஹ்மத் ஷா

5 – இப்ராஹிம் ஜத்ரன்

ஒருநாள் உலகக் கோப்பையில் சதம் அடித்த இளம் வீரர்கள்:

20 வயது 196 நாட்கள் – பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து) vs நெதர்லாந்து, Kolkata, 2011

21 வயது 76 நாட்கள் – ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) vs வெஸ்ட் இண்டீஸ்,

21 வயது 87 நாட்கள் – அவிஸ்கா பெர்னாண்டோ (இலங்கை) vs வெஸ்ட் இண்டீஸ்,

21 வயது 330 நாட்கள் – இப்ராஹிம் ஜத்ரன் (ஆப்கானிஸ்தான்) vs ஆஸ்திரேலியா,

22 வயது 106 நாட்கள் – விராட் கோலி (இந்தியா) vs வங்கதேசம்,

22 வயது 300 நாட்கள் – சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) vs கென்யா,

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இளம் வீரர்கள்:

20 வயது 282 நாட்கள் – முகமது அஷ்ரஃப் (வங்கதேசம்),

21 வயது 138 நாட்கள் – சச்சின் டெண்டுல்கர் (இந்தியா),

21 வயது 309 நாட்கள் – டேவிட் கோவர் (இங்கிலாது)

21 நாட்கள் 330 நாட்கள் – இப்ராஹிம் ஜத்ரன் (ஆப்கானிஸ்தான்),

21 வயது 341 நாட்கள் – குயீண்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா)

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios