மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் அரங்கில் கோலோச்சுவதற்கு கோர் டீம் வலுவாக இருப்பதுதான் காரணம். ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, மலிங்கா என மிகச்சிறந்த வீரர்களை கொண்ட வலுவான கோர் டீமை கொண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ். 

இந்நிலையில், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை மேம்படுத்தும் வகையில், ஏலத்திற்கு முன்னதாக டிரெண்ட் போல்ட்டை டெல்லி கேபிடள்ஸ் அணியிடமிருந்து பெற்றது. ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் நாதன் குல்ட்டர் நைலை ரூ.8 கோடிக்கு எடுத்தது. கிறிஸ் லின்னை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இவர்கள் இருவர் மட்டும்தான் அடுத்த சீசனுக்கான அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட இரண்டு வெளிநாட்டு வீரர்கள். சவுரப் திவாரி உட்பட மொத்தம் 4 உள்நாட்டு வீரர்களை மும்பை இந்தியன்ஸ் எடுத்துள்ளது. 

ஐபிஎல் 2020 -  மற்ற அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் | ஆர்சிபி | டெல்லி கேபிடள்ஸ் | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | ராஜஸ்தான் ராயல்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியின் மொத்த வீரர்களின் சம்பளத்துடன் கூடிய லிஸ்ட் இதோ.. 

1. ரோஹித் சர்மா(கேப்டன்) - ரூ.15 கோடி

2. ஆதித்ய தரே(விக்கெட் கீப்பர்) - ரூ.20 லட்சம்

3. அன்மோல்ப்ரீத் சிங்(பேட்ஸ்மேன்) - ரூ.80 லட்சம்

4. அனுகுல் ராய்(ஆல்ரவுண்டர்) - ரூ.20 லட்சம்

5. ஹர்திக் பாண்டியா(ஆல்ரவுண்டர்) - ரூ.11 கோடி

6. இஷான் கிஷான்(விக்கெட் கீப்பர்) - ரூ.6.2 கோடி

7. பும்ரா(ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.7 கோடி

8. ஜெயந்த் யாதவ்(ஸ்பின் பவுலர்) - ரூ.50 லட்சம்

9. பொல்லார்டு(வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்) - ரூ.5.4 கோடி

10. க்ருணல் பாண்டியா(ஸ்பின் ஆல்ரவுண்டர்) - ரூ.8.8 கோடி

11. மலிங்கா(ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.2 கோடி

12. மிட்செல் மெக்லனெகன்(ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.1 கோடி

13. குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்) - ரூ.2.8 கோடி

14. ராகுல் சாஹர்(ரிஸ்ட் ஸ்பின்னர்) - ரூ.1.9 கோடி

15. சூர்யகுமார் யாதவ்(பேட்ஸ்மேன்) - ரூ.3.2 கோடி

ஏலத்திற்கு முன் மற்ற அணிகளிடமிருந்து பெறப்பட்ட வீரர்கள்:

16. குல்கர்னி(ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.75 லட்சம் (ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து வாங்கப்பட்டவர்)

17. டிரெண்ட் போல்ட்(நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.3.2 கோடி(டெல்லி கேபிடள்ஸ் அணியிடமிருந்து பெறப்பட்டவர்)

18. ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு(வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்) - ரூ.2 கோடி(டெல்லி கேபிடள்ஸ் அணியிடமிருந்து வாங்கப்பட்டவர்)

ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்ட வீரர்கள்:

19. நாதன் குல்ட்டர் நைல்(ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்) - ரூ.8 கோடி 

20. கிறிஸ் லின்(பேட்ஸ்மேன்) - ரூ.2 கோடி

21. சவுரப் திவாரி(பேட்ஸ்மேன்) - ரூ.20 லட்சம்

22. திக்விஜய் தேஷ்முக்(ஆல்ரவுண்டர்) - ரூ.20 லட்சம்

23. ப்ரின்ஸ் பல்வாண்ட் ராய் சிங்(ஆல்ரவுண்டர்) - ரூ.20 லட்சம்

24. மோஹ்சின் கான்(ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.20 லட்சம்