பஞ்சாப்பும் ஆர்சிபியும் ஏதேதோ செய்துகொண்டிருக்கின்றன. ஆர்சிபி அணி எப்போதுமே தெளிவான நோக்கமில்லாமல் தான் ஏலத்திற்கே செல்லும். சில வீரர்களை எதற்காக எடுக்கிறோம் என்பதே தெரியாமல் அதிக தொகை கொடுத்து, அவர்களுக்கு சரியான வாய்ப்பும் கொடுக்காமல், அடுத்த சீசனில் அவர்களை கழட்டிவிட்டு, வேற வீரர்களை தேடும். பஞ்சாப் அணியும் கிட்டத்தட்ட அப்படித்தான். 

ஆனால் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு, தெளிவான திட்டங்களுடன் சரியான பாதையில் கோப்பையை வெல்லும் பாயிண்ட்டை நோக்கி நகர்கிறது. ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியில் பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் என இளம் அதிரடி வீரர்கள் உள்ளனர். அனுபவ வீரர் தவான் அணியிலிருக்கும் நிலையில், ரஹானே, அஷ்வின் ஆகிய வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து வாங்கியது டெல்லி கேபிடள்ஸ் அணி. 

ஐபிஎல் ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் ஷிம்ரான் ஹெட்மயரை ரூ.7.75 கோடிக்கும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸை ரூ.4.80 கோடிக்கும் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் - விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை ரூ.2.40 கோடிக்கும் எடுத்தது. இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் மற்றும் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரையும் தலா ஒன்றரை கோடிக்கும் எடுத்தது டெல்லி கேபிடள்ஸ்.

இவர்கள் தவிர உள்நாட்டு வீரர்களான மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, லலித் யாதவ் ஆகிய மூவரையும் எடுத்தது. 

ஐபிஎல் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் | ஆர்சிபி | மும்பை இந்தியன்ஸ் | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | ராஜஸ்தான் ராயல்ஸ்

டெல்லி கேபிடள்ஸ் அணி:

தக்கவைத்த வீரர்கள்:

ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, சந்தீப் லாமிச்சன், காகிசோ ரபாடா, கீமோ பால், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான், 

ஏலத்திற்கு முன் மற்ற அணிகளிடமிருந்து பெற்ற வீரர்கள்:

ரஹானே, அஷ்வின்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:

ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, லலித் யாதவ்.