நச்சுனு 4 பிளேயரை எடுத்த சிஎஸ்கே.. சம்பளத்துடன் கூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் மொத்த லிஸ்ட்
ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பளத்துடன் கூடிய முழு லிஸ்ட்டை பார்ப்போம்.
ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. அதற்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது.
ஐபிஎல்லில் மூன்று முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோர் டீம் வலுவாக உள்ளதால், ஒவ்வொரு சீசனுக்கான ஏலத்திலும் ஆர்ப்பாட்டம் எல்லாம் இல்லாமல், அணியின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட சில வீரர்களை மட்டுமே எடுக்கும் வழக்கமுடையது சிஎஸ்கே. அதைத்தான் இப்போதும் செய்தது.
நேற்று நடந்த ஏலத்தில், நான்கு வீரர்களை மட்டுமே எடுத்தது சிஎஸ்கே அணி. கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியில் ஆடி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை ரூ.5.5 கோடிக்கு எடுத்தது. கேகேஆர் அணியில் நீண்டகாலம் ஆடிய, இந்திய அணியின் முன்னாள் மற்றும் அனுபவ ரிஸ்ட் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட்டை ரூ.2 கோடிக்கும், உள்நாட்டு போட்டிகளில் அசத்தலாக பந்துவீசிய தமிழ்நாட்டை சேர்ந்த இளம் ஸ்பின் பவுலரான சாய் கிஷோரை அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.
ஐபிஎல் 2020 - மற்ற அணிகள்: மும்பை இந்தியன்ஸ் | ஆர்சிபி | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | ராஜஸ்தான் ராயல்ஸ் | டெல்லி கேபிடள்ஸ்
ஐபிஎல் 2020க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த வீரர்களின் சம்பளத்துடன் கூடிய லிஸ்ட்டை பார்ப்போம்.
1. தோனி(கேப்டன்) - ரூ. 15 கோடி
2. சுரேஷ் ரெய்னா(ஆல்ரவுண்டர்) - ரூ.11 கோடி
3. ஃபாஃப் டுப்ளெசிஸ்(பேட்ஸ்மேன்) - ரூ.1.6 கோடி
4. ரவீந்திர ஜடேஜா(ஆல்ரவுண்டர்) - ரூ.7 கோடி
5. டுவைன் பிராவோ(ஆல்ரவுண்டர்) - ரூ.6.4 கோடி
6. கேதர் ஜாதவ்(ஆல்ரவுண்டர்) - ரூ.7.8 கோடி
7. அம்பாதி ராயுடு(பேட்ஸ்மேன்) - ரூ.2.2 கோடி
8. ஷேன் வாட்சன்(ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்) - ரூ.4 கோடி
9. கேஎம் ஆசிஃப்(ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.40 லட்சம்
10. தீபக் சாஹர்(ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.80 லட்சம்
11. ஹர்பஜன் சிங்(ஸ்பின் பவுலர்) - ரூ.2 கோடி
12. இம்ரான் தாஹிர்(தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்) - ரூ.1 கோடி
13. கரன் ஷர்மா(ஆல்ரவுண்டர்) - ரூ.5 கோடி
14. ஷர்துல் தாகூர்(ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.2.6 கோடி
15. முரளி விஜய்(பேட்ஸ்மேன்) - ரூ.2 கோடி
16. மிட்செல் சாண்ட்னெர்(நியூசிலாந்து ஸ்பின் ஆல்ரவுண்டர்) - ரூ.50 லட்சம்
17. நாராயன் ஜெகதீஷன்(பேட்ஸ்மேன்) - ரூ.20 லட்சம்
18. ருதுராஜ் கெய்க்வாட்(பேட்ஸ்மேன்) - ரூ.20 லட்சம்
19. மோனுசிங்(ஆல்ரவுண்டர்) - ரூ.20 லட்சம்
20. லுங்கி கிங்கிடி(தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.50 லட்சம்
21. பியூஷ் சாவ்லா(ஸ்பின்னர்) - ரூ.6.75 கோடி
22. சாம் கரன்(இங்கிலாந்து ஆல்ரவுண்டர்) - ரூ.5.5 கோடி
23. ஹேசில்வுட்(ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்) - ரூ.2 கோடி
24. சாய் கிஷோர்(ஸ்பின்னர்) - ரூ.20 லட்சம்