வதவதனு வீரர்களை வாங்கிக்குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. ஐபிஎல் 13வது சீசனுக்கான ராஜஸ்தான் அணி

ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலத்தில் அதிகமான வீரர்களை வாங்கிக்குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான்.
 

rajasthan royals squad for ipl 2020

ஐபிஎல் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. ஏலத்திற்கு முன்னதாக சில வீரர்களை கழட்டிவிட்டது ராஜஸ்தான் அணி. ரஹானே, குல்கர்னி, கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய வீரர்களை மற்ற அணிகளுக்கு கொடுத்துவிட்டு மயன்க் மார்கண்டே, அன்கித் ராஜ்பூட் மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகிய வீரர்களை பெற்றுக்கொண்டது.

rajasthan royals squad for ipl 2020

ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர் ஆகிய சிறந்த வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கோர் டீம் ஓரளவிற்கு செட் ஆகிவிட்டது. இந்நிலையில், நேற்று நடந்த ஏலத்தில் ராபின் உத்தப்பா, இளம் வீரர் யாஷஸ்வின் ஜெய்ஸ்வால், ஜெய்தேவ் உனாத்கத் உட்பட மொத்தம் 11 வீரர்களை ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் அணி. 

rajasthan royals squad for ipl 2020

இங்கிலாந்து வீரர் டாம் கரன், தென்னாப்பிரிக்காவின் அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஃபாஸ்ட் பவுலர் ஆண்ட்ரூ டை, வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலர் ஒஷேன் தாமஸ் ஆகியோரையும் ஏலத்தில் எடுத்தது. 

உள்நாட்டு வீரர்களான கார்த்திக் தியாகி, அனுஜ் ராவத், அனிருதா அசோக் ஜோஷி, ஆகாஷ் சிங் ஆகிய வீரர்களையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், மாஹிபால் லோம்ரார், மனன் வோரா, ரியான் பராக், ஷேஷான்க் சிங், வருண் ஆரோன், ஷ்ரேயாஸ் கோபால்.

ஏலத்திற்கு முன் மற்ற அணிகளிடமிருந்து பெறப்பட்ட வீரர்கள்:

ராகுல் டெவாட்டியா, அன்கித் ராஜ்பூட், மயன்க் மார்கண்டே.

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்:

ராபின் உத்தப்பா, ஜெய்தேவ் உனாத்கத், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர், டாம் கரன், ஆண்ட்ரூ டை, ஒஷேன் தாமஸ், கார்த்திக் தியாகி, அனுஜ் ராவத், அனிருதா அசோக் ஜோஷி, ஆகாஷ் சிங்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios