இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு சுப்மன் கில்லிற்கு அதிக வாய்ப்புகள் உண்டு – பூபிந்தர் சிங்!

இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு தொடக்க வீரர் சுப்மன் கில்லிற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேசிய தேர்வாளராக இருந்த பூபிந்தர் சிங் கூறியுள்ளார்.

Former selector Bhupinder Singh gives opinion Shubman Gill is best choice to Indian skipper

பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் சுப்மன் கில். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதே போன்று டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமானார்.

இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா படைத்த சாதனைகளின் பட்டியல்!

இதுவரையில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 890 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 128 ரன்கள் எடுத்துள்ளார். 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1311 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 208 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 4 சதமும், 5 அரைசதமும் அடித்துள்ளார். இவ்வளவு ஏன் 6 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 202 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 126 ரன்கள் (நாட் அவுட்) எடுத்துள்ளார். இப்படி டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் சதம் அடித்த வீரர்களில் இவரும் ஒருவராக திகழ்கிறார்.

ஒரு ரன் கூடுதலாக அடித்து சேவாக் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!

ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் 890 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பெற்றிருந்தார். இதில் 3 சதங்கள் அடங்கும். இந்திய கிரிக்கெட்டின் இளவரசன் என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.

என்ன சோனமுத்தா போச்சா: அவசரப்பட்டு டிக்ளேர் செய்து கடைசில வெற்றியை கோட்டைவிட்ட பென் ஸ்டோக்ஸ், ஆஸி., வெற்றி!

தற்போது, ​​அவரை இந்திய அணியின் வருங்கால கேப்டனாகவும் மக்கள் பார்க்கின்றனர். இந்த நிலையில், ரோகித் சர்மாவிற்குப் பதிலாக இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தேசிய தேர்வாளராக இருந்த பூபிந்தர் சிங் கூறியுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் இந்திய கிரிகெட் அணியின் தேசிய தேர்வாளராக பணியாற்றியுள்ளார்.

புவனேஷ்வரன் வேகத்தில் சுருண்ட நெல்லை ராயல் கிங்ஸ் 124க்கு ஆல் அவுட்; வெற்றி பெறுமா திருப்பூர் தமிழன்ஸ்?

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் பிரகாசமான வீரர்களில் ஒருவர். இந்திய அணியின் அடுத்த பேட்டிங் சென்சேஷன் ஆக இருக்க முடியும். ஆனால், ஒரு கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த முடியுமா என்று இப்போது யூகிக்க இது சரியான நேரமில்லை. அவர், இன்னும் ஏராளமான போட்டிகளில் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தி பேட்டிங் லெஜண்டாக வர வேண்டும். அவரிடம் விளையாட்டு, ஆர்வம் மற்றும் ஆளுமை திறன் உள்ளது. இதன் மூலமாக இந்திய அணியின் வருங்கால கேப்டனாக சுப்மன் கில்லை பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

கொஞ்சம் கூட மனசாட்சி வேண்டாமா? காயத்துக்கு மருந்து கூட போடக் கூடாதா? ஐசிசியை விளாசிய பிராட் ஹாக்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios